பதிவு செய்த நாள்
21 ஜூலை2011
16:59
கொச்சி : வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமான கோத்ரேஜ் நிறுவன இந்த ஆண்டுக்குள் தனது விற்பனை வருமானத்தை ரூ.2700 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ.2000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் கோத்ரேஜ் பொருட்களின் விற்பனை நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் துணை தலைவர் ரமேஷ் சம்பத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ.87 கோடிக்கு விற்பனையாக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக பண்டிகை சிறப்பு விற்பனையாக கோத்ரேஜ் நிறுவனத்தின் வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ், ஏ.சி., மைக்ரோவேவ் ஓவன் அல்லது டி.வி., வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 கிராம் மதிப்பிலான தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஓணம் பண்டிகையின் போது மொத்த விற்பனை 42 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்ப்பதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|