பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
16:01

புதுடில்லி : உலகின் தலைசிறந்த வர்த்தக சேவை புரியும் 20 நாடுகள் கொண்ட பட்டியலை உலக வர்த்தக மையம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 2010ம் ஆண்டில் உலகளவில் சிறந்த ஏற்றுமதி சேவையாற்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. 2009 ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 22வது இடத்தில் இருந்துள்ளது. தற்போது 12 இடங்கள் முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்தியா 110 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி சேவையும், 216 பில்லியன் டாலர்கள் அளவிற்கு விற்பனையும் செய்துள்ளதுள்ளதாக 2011ம் ஆண்டிற்கான உலக வர்த்தக அறிக்கை தெரிவிக்கின்றது. 2010ம் ஆண்டில் இந்தியா சரக்கு ஏற்றுமதி 31 சதவீதம் உயர்ந்துள்ளது. லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தக சந்தைகளில் இந்திய சரக்குகளின் மவுசு அதிகரித்து வருவதே இந்தியாவின் ஏற்றுமதி அளவு அதிகரித்து வருவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|