ஹச்.எஸ்.பி.சி., வங்கியில் 10 ஆயிரம் பணியிடங்கள்ஹச்.எஸ்.பி.சி., வங்கியில் 10 ஆயிரம் பணியிடங்கள் ... டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி 60 சதவீத இடைக்கால டிவிடெண்டு டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி 60 சதவீத இடைக்கால டிவிடெண்டு ...
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சென்னையில்சர்வதேச தரத்தில் வணிக நிர்வாகவியல் கல்வி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
02:39

சென்னை:இன்றைய இளைய சமூகத்தின் 'கனவுக் கல்வி'யாக எம்.பி.ஏ., எனப்படும் வணிக நிர்வாகவியல் கல்வி விளங்குகிறது. இக்கல்வி கற்றவர்களுக்கு கை நிறைய ஊதியத்துடன், கணக்கற்ற வேலைவாய்ப்புகள் காத்திருப்பது தான் இதற்கு காரணம்.நாட்டில் 2,500க்கும் மேற்பட்ட பிசினஸ் ஸ்கூல்ஸ் எனப்படும் வணிக நிர்வாகவியல் கல்வி மையங்கள் உள்ளன. அவற்றுள் முன்னணி 20 மையங்களில், சென்னையை சேர்ந்த கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஜி.எல்.ஐ.எம்.)18வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தை, முதுபெரும் கல்வியாளர், பத்மஸ்ரீ பாலா வி.பாலசந்திரன், 2004ம் ஆண்டு தோற்றுவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்ட இந்த கல்வி மையம், குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக வளர்ச்சி பெற்று, தற்போது மகாபலிபுரம் அருகே மணமை கிராமத்தில், 27 ஏக்கர் பரப்பில் செயல்பட்டு வருகிறது.அமெரிக்காவின் யெல் பல்கலைக்கழகம், ஸ்டூவர்ட் வணிக நிர்வாகவியல் கல்வி மையம், சிங்கப்பூரின் நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் கூட்டுக் கொண்டுள்ள கிரேட் லேக்ஸ் கல்வி மையத்தின், செயல் இயக்குனராக பேராசிரியர் எஸ்.ஸ்ரீராம் பணியாற்றி வருகிறார். சென்னை பல்கலைக்கழக பட்டதாரியான இவர், மும்பை, என்.எம்.ஐ.எம்.எஸ் -ல் சந்தை நிர்வாகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் , சன்பார்மா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகராகவும், வணிகவியல் நிர்வாகக் கல்வி ஆசானாகவும் விளங்கி வருகிறார். இவர் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்- ன் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்து தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி... 'கிரேட் லேக்ஸ்' ...பெயரே புதுமையாக இருக்கிறதே? ஆம்! இதில் சுவாரஸ்யமான பின்னணி உள்ளது. அமெரிக்காவில் மிச்சிகன், எரீ, சுபீரியர், ஹூரான், ஒன்வாரியோ என்ற 5 மிகப் பெரியஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை கிரேட் லேக்ஸ் என்பார்கள். அது போல், கிரேட்லேக்ஸ் கல்வி மையம் உருவாகவும் 5 பேர் காரணமாக இருந்தார்கள். அவர்கள், சந்தைப்படுத்தல் துறையின் ஜாம்பவான் என்றழைக்கப்பட்ட மறைந்த சி.கே.பிரகலாத், பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் மற்றும் பாலாவின் இரு நண்பர்கள் ஆவர். சென்னையில், சர்வதேச தரத்தில் கல்வி மையத்தை நிறுவ வேண்டும் என்ற பேராசிரியர் பாலாவின் சிந்தனைக்கு தூண்டுகோலாகவும், செயல்வடிவிற்கான உந்து சக்தியாகவும் இவர்கள் விளங்கினர். அதனால் இவர்களை நினைவு கூரும் வகையில், கிரேட்லேக்ஸ் என பெயர்சூட்டப்பட்டது. உங்கள் மையத்தில் கற்பிக்கப்படும் எம்.பி.ஏ., கல்வி பற்றி கூறவும்... எம்.பி.ஏ., பட்டத்தை பல்கலைக்கழகங்கள் மட்டுமே வழங்க முடியும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்கூல்ஸ் (ஐ.ஐ.எம்.எஸ்) எனப்படும் வணிக நிர்வாகவியல் கல்வி மையங்கள் இதர பெயர்களில் பட்டங்களை வழங்குகின்றன. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ள கிரேட்லேக்ஸ், போஸ்ட் கிராஜூவேட் புரோக்ராம் மேனேஜ்மென்ட் (பி.ஜி.பி.எம்) உள்ளிட்ட மூன்று வகை முதுகலை பட்டக் கல்வியை வழங்குகிறது. இவை, பல்கலைக்கழகங்கள் வழங்கும் எம்.பி.ஏ., பட்டப் படிப்பை விட மேம்பட்டவை. எப்படி சொல்கிறீர்கள்? இதற்கு என்ன அளவீடு உள்ளது? பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தான் மாற்றப்படும். கிரேட் லேக்ஸ்-ல் சந்தை நிலைப்பாட்டிற்கு ஏற்ப பாடத்திட்டங்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படும். உதாரணமாக, அடுத்த ஆண்டு, வாகனத் துறை குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி காணும், வேலை வாய்ப்பு பெருகும் என ஆய்வில் தெரியவந்தால், அது தொடர்பான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதனால், மாணவர்கள், குறிப்பிட்ட துறையில் மிக ஆழமான கல்வியறிவை பெறுவதுடன், நிறுவனங்களின் பணியாளர் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். வணிக மேலாண்மை படிப்பிற்கு, இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதுமா? இல்லை. இளங்கலை பட்டத்துடன், ஏதாவது ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும். அது மட்டுமன்றி, ஐ.ஐ.எம்.எஸ் நடத்தும் 'கேட்' அல்லது அமெரிக்காவின் ஈ.டி.எஸ் நடத்தும் 'ஜி - மேட்' தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதி கொண்ட மாணவர்கள் மட்டுமே பி.ஜி.பி.எம் எனப்படும் திட்ட நிர்வாக முதுகலைக் கல்வி பயில முடியும். இது ஓராண்டு முழு நேரப் படிப்பாகும். மாணவர்கள், கல்வி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்க வேண்டும். இதற்கான கல்விக் கட்டணம் 9லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். விடுதிக் கட்டணம், உணவு, லேப்-டாப் உள்ளிட்டவற்றை சேர்த்து மொத்தம் 12லட்சம் 50 ஆயிரம் ரூபாய் செலவாகும்.போஸ்ட் கிராஜூவேட் புரோகிராம் மேனேஜ்மென்ட் பார் எக்ஸ்பீரியன்ஸ்டு பீப்பிள் (பி.ஜி.எஸ். பி.எம்) எனப்படும், அனுபவம் கொண்டோருக்கான திட்ட நிர்வாக முதுகலை கல்வியை பகுதி நேர அடிப்படையில் கற்கலாம். கல்விக் காலம் 2 ஆண்டுகள். இதற்கான கட்டணம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.போஸ்ட் கிராஜூவேட் வொர்க் புரொ பஷன் மேனேஜ்மென்ட் பார் எக்ஸ்பீரியன்ஸ்டு பீப்பிள் (பி.ஜி.எம்.டபிள்யு. பி.எம்) எனப்படும் தொழில் வல்லுனர்களுக்கான முதுகலை கல்விக் கட்டணம் 6 லட்ச ரூபாய். வாரத்தில் 2 நாள்கள் வீதம் 2 ஆண்டுகள் கல்வி கற்க வேண்டும். மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க, இந்தியன் வங்கி, கிரெடில்லா ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். கல்விக் கட்டணம் மிக அதிகமாக உள்ளதே? பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு இது 'எட்டாக் கல்வி' அல்லவா? கல்விக் கட்டணம் அதிகம் தான். ஆனால், கல்வி கற்பிக்கும் தரத்துடன் ஒப்பிடுகையில் இது நியாயம்தான் என்று உங்களுக்கே தோன்றும். எங்கள் விரிவுரையாளர்களில் 40 சதவீதம் பேர் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவர்கள். அவர்கள் கிரேட் லேக்ஸ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, இந்தியாவிற்கு வந்து செல்லும் செலவை கணக்கிடுங்கள். மேலும், இக்கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஆண்டுக்கு 9 - 24 லட்ச ரூபாய் வரை ஊதியம் கிடைக்கிறது. அதனால் அவர்கள் கல்விக்காக செலவிடும் தொகையை 2 ஆண்டுகளில் திரும்பப் பெற்று விடலாம். உங்கள் நிறுவனத்தில் பயின்ற அத்தனை பேருக்கும் நீங்கள் சொல்லும் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளதா? கடந்த 7 ஆண்டுகளில் 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பி.ஜி.பி.எம்., முடித்துள்ளனர். 100 சதவீதம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். சென்னையை தவிர வேறு எந்தெந்த இடங்களில் உங்கள் கல்வி மையம் உள்ளது? டில்லி அருகே கூர்கானில் ஐ.ஈ.எம்.ஆர்., நிறுவனத்தின் கூட்டுடன் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் எனர்ஜி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் என்ற வணிகவியல் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது.மும்பை பிசினஸ் ஸ்கூல் நிறுவனத்துடன் விரிவுரையாளர் பரிமாற்றம்; கல்வித் திட்டம் சார்ந்த வேலைகளுக்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள் ளோம். ஓரிரு ஆண்டுகளில் மும்பை பிசினஸ் ஸ்கூல், எங்கள் நிறுவனத்தின் அங்கமாக மாற உள்ளது.இணையதளம் வாயிலாக கல்விச் சேவை வழங்கி வரும் எஜூகாம்ப் நிறுவனம், கிரேட் லேக்ஸ்-ல் 150 கோடி ரூபாய் முதலீடு மேற் கொள்ள உள்ளது. இதையடுத்து, எஜூகாம்ப், ஆப்ரிக்கா,சார்க் நாடுகளில் விரிவுபடுத்த உள்ள கல்விப் பயிற்சிக்கு தேவையான பாடத்திட்டங்கள், விரிவரையாளர் சேவை உள்ளிட்டவற்றை கிரேட் லேக்ஸ் வழங்கும். ஓரிரு ஆண்டு களில் கோல்கட்டா அல்லது ஒடிசாவின் புவனேஸ்வரில் கிரேட் லேக்ஸ் வணிகவியல் கல்வி மையத்தை துவங்க திட்ட மிட்டுள்ளோம். விரிவாக்கத்திற்கான நிதியை திரட்ட, பங்கு வெளியீட்டில் இறங்கும் திட்டம் உள்ளதா? இல்லை. பங்கு வெளியீடு மேற்கொள்ளவும் முடியாது. ஏனென்றால், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட், லாப நோக்கமற்ற, அறக்கட்டளை சட்டப்பிரிவு 25ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். அதனால், நிறுவனத்தின் லாபம் முழுவதும், விரிவாக்க திட்டங்களுக்கே செலவிடப்படுகிறது. ஏ.கே.விஜய்தேவ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)