மொபைல்போன் பயன்பாடு 120கோடியை எட்டும்:ஆய்வறிக்கையில் தகவல்மொபைல்போன் பயன்பாடு 120கோடியை எட்டும்:ஆய்வறிக்கையில் தகவல் ... சரிவில் தொடங்கியது வர்த்தகம் சரிவில் தொடங்கியது வர்த்தகம் ...
நடப்பு 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு:கார் விற்பனையில் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
02:43

புதுடில்லி:மூலப்பொருட்கள் விலை உயர்வு, வட்டி செலவினம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால், நாட்டின் வாகனத் துறையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூலை மாதத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்றாலும், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள, மாருதி சு‹கி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, சென்ற ஜூலை மாதத்தில், கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 25.34 சதவீதம் சரி வடைந்து, 75 ஆயிரத்து 300 ஆக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலை மாதத்தில், 1 லட்சத்து 857 ஆக இருந்தது.இதுகுறித்து, இந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:கடந்த ஜூலை மாதத்தில், உள்நாட்டில் கார்கள் விற்பனை, 26.20 சதவீதம் குறைந்து, 66 ஆயிரத்து 504 ஆக சரிவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்தாண்டு ஜூலை மாதத்தில், 90 ஆயிரத்து 114 ஆக இருந்தது. இதே மாதங்களில் நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதியும், 18.12 சதவீதம் குறைந்து, 10 ஆயிரத்து 743 என்ற எண்ணிக்கையிலிருந்து, 8,796 ஆக குறைந்துள்ளது.மாருதி நிறுவனத்தின், எம்.800, ஏ-ஸ்டார், ஆல்டோ மற்றும் வேகன்ஆர் ஆகிய கார்களின் விற்பனை, இதே மாதங்களில், 15.65 சதவீதம் குறைந்து, 45 ஆயிரத்து 68 என்ற எண்ணிக்கையிலிருந்து, 38 ஆயிரத்து 28 ஆக குறைந்துள்ளது.மேலும், எஸ்டிலோ, ஸ்விப்ட் மற்றும் ரிட்ஸ் ஆகிய கார்களின் விற்பனை, 56.02 சதவீதம் குறைந்து, 20 ஆயிரத்து 691 என்ற எண்ணிக்கையிலிருந்து, 9,099 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் நடுத்தர வகையைச் சேர்ந்த சேடன் எஸ்.எக்ஸ்.4 விற்பனை 23.82 சதவீதம் உயர்ந்து, 1,860 லிருந்து, 2,333 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் பயணிகள் கார்கள் விற்பனை, 31.04 சரிவடைந்து, 76 ஆயிரத்து 111லிருந்து, 52 ஆயிரத்து 483 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாட்டா மோட்டார்ஸ்: கடந்த ஜூலை மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனையும், 5.96 சதவீதம் சரிவடைந்து, 63 ஆயிரத்து 761 ஆக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலை மாதத்தில், 67 ஆயிரத்து 800 ஆக இருந்தது. நிறுவனத்தின் பயணிகள் கார்கள் விற்பனை, 38.30 சதவீதம் சரிவடைந்து, 27 ஆயிரத்து 865 என்ற எண்ணிக்கையிலிருந்து, 17 ஆயிரத்து 192 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.நிறுவனத்தின் குறைந்த விலை காரான, 'நானோ'வின் விற்பனையும், 64 சதவீதம் சரிவடைந்து, 3,260 ஆகவும், இண்டிகா கார்கள் விற்பனை, 32 சதவீதம் குறைந்து, 5,860 ஆகவும் சரிவடைந்துள்ளது. சுமோ, சபாரி, ஆர்யா ஆகிய கார்கள் விற்பனை, 2 சதவீதம் குறைந்து, 3,195 ஆக சரிவடைந்துள்ளது.அதேசமயம், இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை, 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24 ஆயிரத்து 962 ஆகவும், கனரக வாகனங்கள் விற்பனை, 4 சதவீதம் உயர்ந்து, 15 ஆயிரத்து 836 ஆகவும் உயர்ந்துள்ளது. இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 36.08 சதவீதம் உயர்ந்து, 4,241 என்ற எண்ணிக்கை யிலிருந்து, 5,771 ஆக அதிகரித்துள்ளது. ஹுண்டாய் மோட்டார் இந்தியா: கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில், 2வது இடத்தில் உள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, சென்ற ஜூலை மாதத்தில், 1.5 சதவீதம் சரிவடைந்து, 49 ஆயிரத்து 667 ஆக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலை மாதத்தில், 50 ஆயிரத்து 411 ஆக இருந்தது. இதே மாதங்களில், உள்நாட்டில் இந் நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 11 சதவீதம் குறைந்து, 28 ஆயிரத்து 811லிருந்து, 25 ஆயிரத்து 642 ஆக உள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 11.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 21 ஆயிரத்து 600 என்ற எண்ணிக்கையிலிருந்து, 24 ஆயிரத்து 25 ஆக உயர்ந்துள்ளது.வாகனக் கடன்களுக்கான வட்டிவிகிதம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் செலவினம் உயர்ந்துள்ளதால், கார்கள் விற்பனை குறைந்துள்ளது என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹுண்டாய் நிறுவனம், சான்ட்ரோ, ஐ-10, ஐ-20, அசென்ட், வெர்னா, சோனாட்டா டிரான்ஸ்பார்ம், சான்ட்டா எப்.இ. போன்ற வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கார் தொழிற்சாலை, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. மகிந்திரா அண்டு மகிந்திரா: இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, கடந்த ஜூலையில், 41.30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 39 ஆயிரத்து, 633 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே ஜூலையில், 28 ஆயிரத்து, 49 ஆக இருந்தது. உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 41.90 சதவீதம் அதிகரித்து, 26 ஆயிரத்து, 303 என்ற எண்ணிக்கையிலிருந்து, 37 ஆயிரத்து, 323 ஆக உயர்ந்துள்ளது.இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 32.30 சதவீதம் அதிகரித்து, 1,746 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,310 ஆக உயர்ந்துள்ளது. மகிந்திரா நிறுவனம், ஸ்கார்பியோ, சைலோ, போலேரோ மற்றும் வெரிடோ போன்ற கார்களையும், ஜியோ மற்றும் மேக்சிமோ என்ற பெயரில், மூன்று சக்கர வாகனங்களையும் தயாரித்து வருகிறது. இந்த வாகனங்களின் விற்பனை, கடந்த ஜூலையில், 5,418 என்ற எண்ணிக்கையிலிருந்து, 5,395 ஆக குறைந்துள்ளது. நிசான் மோட்டார் இந்தியா: சென்னை, ஒரகடத்தில் தொழிற்சாலையை கொண்டு செயல்பட்டு வரும், இந்நிறுவனம், கடந்த ஜூலையில், உள்நாட்டில், 1,593 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில், 1,005 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதன் மைக்ரா வகை கார்கள் விற்பனை, 1,550 ஆக இருந்தது. இது, கடந்த ஆண்டு ஜூலையில், 908 ஆக இருந்தது.இந்நிறுவனம், கடந்தாண்டு ஜூலையிலிருந்து, விற்பனையை துவங்கியது. அதுமுதல், இது வரையிலுமாக இந்நிறுவனம், இந்தியாவில், 18 ஆயிரம் மைக்ரா கார்களை விற்பனை செய்துள்ளது. டி.வி.எஸ். மோட்டார்ஸ்: இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, கடந்த ஜூலையில், 14 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து, 89 ஆயிரத்து, 962 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில், 1 லட்சத்து, 66 ஆயிரத்து, 214 ஆக இருந்தது. இருசக்கர வாகனங்கள் விற்பனை, கடந்த ஜூலையில், 14 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து, 63 ஆயிரத்து, 106 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1 லட்சத்து, 86 ஆயிரத்து, 672 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றுள், ஸ்கூட்டர் வகை வாகனங்கள் விற்பனை, 22 சதவீதம் வளர்ச்சியடைந்து, 49 ஆயிரத்து, 333 ஆகவும், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை, 15 சதவீதம் உயர்ந்து, 70 ஆயிரத்து, 170 ஆகவும் அதிகரித்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து, 60 ஆயிரத்து, 348 ஆகவும், ஏற்றுமதி, 31 சதவீதம் அதிகரித்து, 26 ஆயிரத்து, 324 ஆகவும் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் ஏற்றுமதி, இதே மாதங்களில், 34 சதவீதம் வளர்ச்சி கண்டு, 21 ஆயிரத்து, 273 என்ற எண்ணிக்கையிலிருந்து, 28 ஆயிரத்து, 542 ஆக உயர்ந்துள்ளது.நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 6 சதவீத அதிகரிப்புடன், அதாவது, 3,108 என்ற எண்ணிக்கையிலிருந்து, 3,290 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)