பதிவு செய்த நாள்
03 செப்2011
13:29
சென்னை : டில்லியில் நடந்த 19வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைக் குறிக்கும் வகையில், புதிய 2 ரூபாய் நாணயங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாணயத்தின் மதிப்பு இரண்டு ரூபாய். அளவு 27 மி.மீ., துருப்பிடிக்காத இரும்பு 83 சதவீதமும், குரோமியம் 17 சதவீதமும் கொண்டது. நாணயத்தின் முகம் இரண்டு குறுக்குக் கோடுகளால், 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.வலப்பக்கம் மையப்பகுதியில், மதிப்பு இலக்கம் 2 என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் பின்புறம், '19வது காமன்வெல்த் விளையாட்டுகள்-2010 டில்லி'யின் இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இரண்டு ரூபாய் நாணயங்களும் செல்லும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|