பதிவு செய்த நாள்
16 அக்2011
00:26

சென்னை:ஏற்றுமதியாளர்கள், ஒரு பரிமாற்றத்தின்போது அயல்நாட்டில் வைத்துக் கொள்ளும் அன்னியச்செலாவணி வரம்பை 500 டாலரில் இருந்து 3,000 டாலராக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஒரே வாரத்தில், ஏற்றுமதி தியாளர்களுக்கு அடுத்தடுத்து சலுகைகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி, ஏற்றுமதியாளர்கள் ஆன்-லைன் வாயிலாக அயல் நாட்டு நிறுவனங்களிடம் இருந்து, ஒரு பரிவர்த்தனை யில் பெறும் தொகையின் வரம்பையும் உயர்த்தியுள்ளது. இதன்படி, ஆன்-லைன் மூலம், ஒரு பரிவர்த்தனையில் பெறும் தொகை 500 டாலரில் இருந்து 3,000 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசு, சில தினங்களுக்கு முன்பு ஏற்றுமதியாளர்களுக்கு 900 கோடி ரூபாய்க்கு சலுகைகளை அறிவித்தது.இதன் மூலம் நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதியாளர்களுக்கு 1,700 கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன.இது குறித்து, தொழில் மற்றும் வர்த்தக துறை செயலர் ராகுல் குல்லார் கூறியதாவது: கைத்தறி, கைவினைப் பொருட்கள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வோருக்கும், சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர் களுக்கும் கடனுக்கான வட்டியில், 2 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்றுமதி யாளர்களுக்கு மேலும் 900 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 1,700 கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளால் லத்தீன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் காமன் வெல்த் சுயாட்சி நாடுகளுக்கு பொறியியல் பொருட் கள், மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வோர் பெரிதும் பயனடைவர். இந்நாடு களுக் கான ஏற்றுமதியில் ஏற்கெனவே 3 சதவீத வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ஒரு சதவீதம் வழங்கப் படுகிறது. நடப்பு நிதியாண்டில், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் பொறியியல், மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் ஆகிய துறைகளில், 50 பொருட்களின் ஏற்றுமதி மதிப்பில், 1 சதவீதம், கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் குல்லார் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|