பதிவு செய்த நாள்
16 அக்2011
00:24

சேலம்:தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வரத்து அதிகரிப்பால் உளுத்தம் பருப்பு, எண்ணெய் வகைகளின் விலை சரிவடைந்துள்ளது, இது, பொதுமக்கள் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு, உளுத்தம் பருப்பு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரம் உளுத்தம் பருப்பின் விலை, குவிண்டாலுக்கு 800 ரூபாய் வரை சரிந்தது. தமிழகத்தில் இந்த ஆண்டு உளுந்து விளைச்சல் அதிகரித்துள்ளது.அதே சமயம்,மத்திய பிரதேசம்,மகாராஷ்டிர மாநிலங் களில் இருந்தும் அதிக அளவில் உளுந்து வருகிறது. சென்னை துறைமுகத்திற்கு, பர்மா ரக உளுந்து வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சேலம் சந்தைக்கு, பர்மா ரக உளுத்தம் பருப்பின் வரத்து வழக்கத்தை விட இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால், சேலம், விருதுநகர் உள்பட தமிழகத்தின் அனைத்து சந்தைகளிலும் உளுத்தம் பருப்பு விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சென்ற செப்டம்பர் மாத இறுதியில், ஒரு குவிண்டால் உளுத்தம் பருப்பு 8,300 ரூபாய்க்கு விற்பனை யானது. இது, செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, 300 ரூபாய் குறைந்து 8,000 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 3ல், உளுத்தம் பருப்பு விலையில் மேலும் 500 ரூபாய் குறைந்து, 7,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட் டது. இது, 10ம் தேதியன்று மேலும் குறைந்து 7,200 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரம் வரை சில்லரை விலையில் கிலோ,85 ரூபாய்க்கு விற்ற உளுத்தம் பருப்பு,தற்போது 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உளுத்தம் பருப்பு விலையைத் தொடர்ந்து,எண்ணெய் வகைகளில் கடலை எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய் ஆகிய வற்றின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நிலக்கடலை அறுவடை துவங்கி உள்ள நிலை யில், விவசாயிகள் தங்களின் தீபாவளிச் செலவுக்காக அதிக அளவில் நிலக்கடலையை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக, எண்ணெய் ஆலைகளுக்கு கடலை வரத்து அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை கடலை எண்ணெய்,15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின், 1,530 ரூபாய்க்கு விற் பனையானது. இது, தற்போது 1,485 ரூபாயாகக் குறைந்துள்ளது.சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர், 103 ரூபாயில் இருந்து 99 ரூபாயாகக் குறைந்துள்ளது.15 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய் விலை, 1,650 ரூபாயில் இருந்து 1,575 ரூபாயாக சரிவடைந் துள்ளது. சில்லரை விற்பனையில் 112 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் கடலை எண்ணெய், தற்போது 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணெய் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை, 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின், 1,215 ரூபாய்க்கு விற்றது. இது, தற்போது 45 ரூபாய் குறைந்து, 1,170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் 83 ரூபாய்க்கு விற்பனையான சூரியகாந்தி எண்ணெய், 80 ரூபாயாக சரிவடைந்துள்ளது.இது குறித்து சேலம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி சீனிவாசன் கூறியதாவது: தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் விலையில் உயர்வு ஏற்படுவது வழக்கம். ஆனால், பெரிய வியாபாரிகள் கூட்டாகச் செயல்படுவதால், தற்போது உளுத்தம் பருப்பு விலையில் குவிண்டாலுக்கு 1,100 ரூபாய் வரையிலும், எண்ணெய் வகையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு மேலும் தொடர வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி யுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு தீபாவளியில் எண்ணெய், பருப்பு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|