பதிவு செய்த நாள்
19 அக்2011
11:01

மும்பை: வர்த்தக வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது 407 சரக்கு வாகனம் உற்பத்தி துவங்கியதன் வெள்ளிவிழாவை கொண்டாடியது. கடந்த 1986-ம் ஆண்டு வர்த்தக மற்றும் பயன்பாட்டிற்காக, 407 என்ற மாடலில் சரக்கு வாகனத்தினை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் 25-ம் ஆண்டு விழா நடந்தது. இந்த வாகனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 10 ஆண்டுகளில் (1996-ம்) 75 சதவீத வளர்ச்சியை எட்டியது. டேடோயட்டா, மிட்சுபிசி, நிஸான் போன்ற சிறிய லாரிகளுக்கு போட்டியாக , டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 407 என்ற மினி சரக்கு லாரியை சந்தையில் அறிமுகம் செய்து இன்று வரை நல்ல வரவேற்புடன் திகழ்கிறது. தற்போது பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் மினி பேருந்து உற்பத்தயிலும் , டீசல் எரிபொருளை தவிர்த்து, இயற்கை எரிவாயு வாயிலாக இயங்கக்கூடிய மினி பேருந்துகளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|