பதிவு செய்த நாள்
26 அக்2011
02:23

புதுடில்லி:வரும் 2013ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சியில், இந்தியா சீனாவை விஞ்சி சாதனை படைக்கும் என, சர்வதேச ஆலோசனை நிறுவனமான எர்னஸ்ட் அண்டு யங் தெரிவித்துள்ளது.வரும் 2013ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். அதேசமயம், அவ்வாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள் ளது. இந்தியாவில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். நடப்பு 20 11-12ம் நிதியாண்டில்,நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் என்றளவில் இருக்கும்.இது, 2010-11ம் நிதி யாண் டில் 8.2 சதவீதம் என்றளவில் இருந்தது. இதன் வளர்ச்சி, வரும் 2012ம் காலண்டர் ஆண்டில், 8 சதவீதம் என்ற அளவிலும், 2013ம் ஆண்டில் 9.5 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும். அதேசமயம், 2013ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9 சதவீத அளவிற்கே இருக்கும் என இந்நிறுவனம் வெளி யிட் டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.எனினும், வரும் 2014ம் ஆண்டில், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 9 சதவீதம் என்ற அளவிலும், சீனாவின் வளர்ச்சி 8.6 சதவீதம் என்ற அளவிலும் குறைந்து காணப்படும்.வளர்ச்சி அடைந்து வரும் பல நாடுகளில், வரும் 2013ம் ஆண்டிலிருந்து, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவே முன்னிலை வகிக்கும். வளர்ச்சி அடைந்து வரும் 25 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என மதிப்பிடப்பட் டுள் ளது.இந்தியாவும், சீனாவும் உள்நாட்டு சந்தைகளை அதிகம் சார்ந்துள்ளன. மற்ற நாடுகளை அதிகம் சார்ந்திராமல், தற் சார்புடையதாக உள்ளதால், சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார சுணக்க நிலையை, இவ்விரு நாடுகளும் மிகவும் எளிதாக எதிர்கொண்டு விடுகின்றன.இந்தியாவைப் பொறுத்தவரையில், பணவீக்க உயர்வு மட்டுமே இடர்பாடு அளிப்பதாக உள்ளது. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், இந்தியாவின் பொதுப் பணவீக்கம் 9 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. சென்ற செப்டம்பரில் பணவீக்கம், 9.72 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்துள்ளது என, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்தியாவின் பணவீக்கம், நடப்பு ஆண்டின் இறுதியில் இருந்து குறைந்து,அமெரிக்கா மற் றும் ஐரோப்பிய நாடுகள், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் நிலையில், அது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வலுச் சேர்ப்பதாக அமையும்.மேலும், இந்தியாவின் பணவீக்கம் குறைந்து, வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்படாத நிலையில், நுகர்வோர் செலவிடுவது அதிகரிக்கும். இதையடுத்து, இந்தியாவின் ஒட்டு மொத்த வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் விறுவிறுப்பு ஏற்படும். அதன் பிறகு, அடுத்த ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதாரம், சீரான அளவில் வளர்ச்சியடையத் தொடங்கும்.இந்தியா வைப் பொறுத்தவரையில், நாட்டு மக்களின் சேமிப்பும், முதலீடுகளும் மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி.,)மதிப்பில், இவ்விரண்டின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்காக உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது என, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|