சரக்கு விற்பனையால் டில்லி அரசுக்கு 6 மாதத்தில் ரூ.1248 கோடி வருமானம்சரக்கு விற்பனையால் டில்லி அரசுக்கு 6 மாதத்தில் ரூ.1248 கோடி வருமானம் ... மண் அரிப்பை தடுக்கும் கயிறு உற்பத்தி தீவிரம் மண் அரிப்பை தடுக்கும் கயிறு உற்பத்தி தீவிரம் ...
நிறுவனச் செய்திகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2011
00:01

பாரத் எலக்ட்ரானிக்ஸ் வருவாய் ரூ.1,224 கோடி பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், 125 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 20 சதவீதம் (104 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 1,046 கோடியிலிருந்து, 1,224 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. என்.எச்.பி.சி. நிறுவனம்நிகர லாபம் ரு.966 கோடி பொதுத் துறையைச் சேர்ந்த என்.எச்.பி.சி., நிறுவனம், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 966 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 40 சதவீதம் அதிகமாகும்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 48 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,831 கோடி ரூபாயாக உள்ளது. சுந்தரம் பைனான்ஸ் வழங்கிய கடன் ரூ.2,273 கோடி சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், 90.73 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 34 சதவீதம் (67.53 கோடி ரூபாய்) அதிகம்.இதே காலத்தில், இந்நிறுவனம் வழங்கிய கடன்கள், 20 சதவீதம் அதிகரித்து, 1,898 கோடியிலிருந்து, 2,273 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பீ.இ.எம்.எல். நிறுவனம் நிகர லாபம் 4 சதவீதம் வளர்ச்சி பீ.இ.எம்.எல்., நிறுவனம், செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், 15.30 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 3.8 சதவீதம் (14.74 கோடி ரூபாய்) அதிகம்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 56 சதவீதம் வளர்ச்சி கண்டு, 509.27 கோடியிலிருந்து, 792.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாருதி சுசூகி இந்தியா நிகர லாபம் 60 சதவீதம் சரிவு மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், 240.44 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 60 சதவீதம் (598.24 கோடி ரூபாய்) குறைவு.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாயும், 9,282.30 கோடியிலிருந்து, 7,949.36 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிறுவனம், குஜராத் மாநிலத்தில் உள்ள மெசனா மாவட்டத்தில் புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. டைட்டான் இண்டஸ்ட்ரீஸ் நிகர விற்பனை ரூ.2,096 கோடி டைட்டான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 148கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 128கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில் இதன் நிகர விற்பனை 1,536 கோடியிலிருந்து 2,096 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)