பதிவு செய்த நாள்
31 அக்2011
00:18

புதுடில்லி:நாட்டின் உருக்கு உற்பத்தி, நடப்பு காலண்டர் ஆண்டின், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 5.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், உலகளவில் இதன் உற்பத்தி 8.2 சதவீதமாகவும், சீனாவில் 10.7 சதவீதமாகவும் உள்ளது.ஜனவரி - செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியா 5.39 கோடி டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 5.11 கோடி டன்னாக இருந்தது என, உலக உருக்கு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே காலத்தில், சீனாவின் உருக்கு உற்பத்தி 47.49 கோடி டன்னிலிருந்து, 52.57 கோடி டன்னாக மிகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ம் ஆண்டின் இதே காலத்திற்கு பிறகு, தற்போது சீனாவில் உருக்கு உற்பத்தி 12.50 கோடி டன் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்தியாவில் இதன் உற்பத்தி 70 லட்சம் டன் என்ற குறைந்த அளவில் தான் அதிகரித்துள்ளது.ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், உலகளவில் உருக்கு உற்பத்தி 113.38 கோடி டன்னாக உள்ளது. இதில், ஆசியப் பகுதிகளின் பங்களிப்பு 72.83 கோடி டன்னாக உள்ளது.இதே காலத்தில், ஜப்பான் (8.1 கோடி டன்), அமெரிக்கா (6.46 கோடி டன்), ரஷ்யா (5.18 கோடி டன்) மற்றும் தென்கொரியா (5.06 கோடி டன்) ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உருக்கு உற்பத்தி செய்துள்ளன.இந்தியாவில் கச்சா உருக்கு உற்பத்தி, கடந்த 2000ம் ஆண்டில், 2.2 கோடி டன்னாக இருந்தது. இது, சென்ற 2010ம் ஆண்டில் 7 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் உருக்குத் துறை குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.இந்தியாவின் உருக்கு உற்பத்தி வரும் 2020ம் ஆண்டில் 18-20 கோடி டன்னாகவும், 2050ம் ஆண்டில், 50 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|