பதிவு செய்த நாள்
10 நவ2011
00:22

சென்னை:மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், எஸ் மொபிலிட்டி நிறுவனம், "ஸ்பைஸ்' என்ற பிராண்டில், மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம்,தமிழகத்தில் மொபைல் போன் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும்,இந்நிறுவனம், ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில், "எம்ஐ-350' என்ற புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தின் செயல் துணை தலைவர் (தமிழகம் மற்றும் கேரளா) டி.எம்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:இளைய தலைமுறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய மொபைல் போன்களை அறிமுகம் செய்வதில், நிறுவனம் முன்னோடியாக உள்ளது. நிறுவனத்தின் மொத்த மொபைல் போன் விற்பனையில், 50 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
மீதமுள்ள, 50 சதவீதம், நிறுவனத்தின் இமாச்சலப் பிரதேசம், பதி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இத் தொழிற்சாலை,மாதத்திற்கு, ஐந்து லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.மொபைல் போன் விற்பனைக்கு,தமிழகம் சிறந்த சந்தையாக உள்ளது.எனவே,நிறுவனம் தமிழகத்தில் விற்பனையை அதிகரிக்கத் திட்ட மிட்டுள்ளது.தற்போது,நிறுவனம்,மாதம் ஒன்றுக்கு,20 ஆயிரம் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. இதை, அடுத்த நிதியாண்டில், மாதம் ஒன்றுக்கு, 50 ஆயிரமாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொபைல் போன் சந்தையில், நிறுவனத்தின் பங்களிப்பு, 5 சதவீதம் என்றளவில் உள்ளது.தற்போது, அறிமுகம் செய்துள்ள,"எம்.ஐ.-350' மொபைல் போனில், "இரண்டு சிம் கார்டு' போடும் வசதி செய்யப்பட்டுள்ளது.இதில், 32 மெகா பிக்சல் கேமரா,1,500எம்.ஏ.எச்., திறன் கொண்ட பேட்டரி, 8.8 அங்குல தொடுதிரை,புஷ் மெயில் ஆகிய நவீன வசதி கள் உள்ளன. இதன் விலை, 9,999 ரூபாய். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|