பதிவு செய்த நாள்
10 நவ2011
00:23

சென்னை:தங்கம் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்னையில், வரலாற்றில் முதல் முறையாக, நேற்று தங்கத்தின் விலை, கிராமுக்கு, 22 ரூபாய் உயர்ந்து, 2,719 ரூபாய்க்கும், ஒரு சவரன் விலை, 176 ரூபாய் அதி கரித்து, 21 ஆயிரத்து 752 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று முன் தினம், ஒரு கிராம் தங்கம் விலை, 2,697 ரூபாய் க்கும், ஒரு சவரன் விலை, 21 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையும், கிலோவுக்கு, 715 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறும்போது, "கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால், உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.வளரும் நாடுகளில், தங் கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|