பதிவு செய்த நாள்
16 நவ2011
03:06

கொச்சி:இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அதன் விலை 23 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், இயற்கை ரப்பர் உற்பத்தி 5 சதவீதம் வளர்ச்சி கண்டு 4 லட்சத்து 80 ஆயிரத்து 700 டன்னாக உயர்ந்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பால், ரப்பர் விலை சரிவடைந்துள்ளது.
எனினும், சென்ற திங்களன்று, சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரப்பர் விலை 7 ரூபாய் அதிகரித்து,168 ரூபாய்என்ற அளவிற்கு விலை போனது. அதே சமயம்,உள்நாட்டில் ஒரு கிலோ ரப்பர் 6 ரூபாய்அதிகரித்து,193 ரூபாய்என்ற அள வில் விற்பனையானது.ஆனால், ஒரு கிலோ இயற்கை ரப்பருக்கு 200 ரூபாய்என்ற அளவில் விலை கிடைத் தால் தான் இழப்பை தடுக்க முடியும் என, ரப்பர் விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம்,டயர் நிறுவனங்கள் கிலோ 185 ரூபாய்வீதம்,5,000 டன் இயற்கை ரப்பரை வாங்கியுள்ளன. மாற்று டயர் சந்தையில், தேவை அதிகரித்து வருவதால், இயற்கை ரப்பரை டயர் நிறுவனங்கள் அதிக அளவில் வாங்கிவரு கின்றன.கடந்த செப்டம்பர் மாதத்தை விட, அக்டோபர் மாதத்தில், மாற்று டயர் சந்தையில் விற்பனை அதிகரித் துள்ளது. அதனால், டயர் நிறுவனங்கள் அதிகளவில் இயற்கை ரப்பரை வாங்கி வருகின்றன. அப்போலோ டயர்ஸ் நிறுவனம், நாள்தோறும் 200 டன் இயற்கை ரப்பரை வாங்கி வருகிறது.மேலும்,இயற்கை ரப்பர் விலை குறைந்து வருவதால், பல டயர் தயாரிப்பு நிறுவனங்கள் ரப்பரை அதிக அளவில் வாங்கி வருகின்றன.
இதனால், ரப்பருக்கான தேவை அதிகரித்து, வரும் மாதங்களில் அதன் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. முன்பேர சந்தையில், வரும் டிசம்பர் மாத ஒப்பந்தத்தில், ஒரு கிலோ ரப்பர் 196 ரூபாய்என்ற அள விற்கு விலை போகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|