பதிவு செய்த நாள்
16 நவ2011
03:08

கோகோ கோலா நிறுவனம், அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய்முதலீட்டில் விரிவாக் கத் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.இந்தியாவில் ஒரு காலத்தில்,குளிர்பான சந்தையில்,கோகோ கோலா தனி ராஜா ங்கம் நடத்திக் கொண்டிருந்தது. ஆனால்,1977ம் ஆண்டு மத்தியில், ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு, உள் நாட்டு குளிர்பான நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன், கோகோ கோலா விற்பனைக்கு தடை விதிக் கப்பட்டது.
இதையடுத்து, உள்நாட்டில் கேம்பகோலா, தம்ஸ் அப் போன்ற குளிர்பானங்கள் சந்தையில் அறிமுகமாயின. இந் நிலையில், 1991ல், புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டது. இதையடுத்து, 1993ம் ஆண்டு, கோகோகோலா,இந்தியாவில் மீண்டும் கால் பதித்தது. கடந்த,18 ஆண்டுகளில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதி க மாக இந்நிறுவனம் முதலீடு மேற்கொண்டுள்ளது.
தற்போது, பல்வேறு விரிவாக்கத் திட்டங்களுக்காக, இதே அளவிலான தொகையை முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உள்வள நிதி ஆதாரங்கள், கடன், அன்னிய நேரடி முதலீடு வாயிலான பங்கு மூலதனம் உள் ளிட்டவற்றின் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என, கோகோ கோலா நிறு வனத்தின் யுரேஷியா மற்றும் ஆப்ரிக்க பிரிவின் தலைவர் அமெட் சி.போசர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த ஐந்தாண்டுகளில்,கோகோ கோலா குளிர்பான விற்பனை கடைகளின் எண்ணிக்கை, 15 லட்சத் தில் இருந்து, 30 லட்சமாக உயர்த்தப்பட உள்ளன. மேலும், குளிர்பான விற்பனை இரு மடங்காக உயர்த்தப்படும். சென்றாண்டு, தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்பட்டதை விட, இந்தியாவில் அதிக அளவில் கோகோ கோலா விற்பனையாகியுள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டங்கள் மூலம், உலகில் கோகோ கோலா அதிக அளவில் விற்பனையாகும் நாடுகளின் வரிசை யில், இந்தியா ஆறாவது இடத்தை பிடிக்கும் என்றும் அமெட் சி.போசர் மேலும் கூறினார்.கோகோ கோலா நிறு வனம், குளிர்பானங்களுடன் ”த்திகரிக்கப்பட்ட குடிநீர், நொறுக்குத் தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றின் வர்த் தகத்திலும் ஈடுபட்டு வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|