பதிவு செய்த நாள்
19 நவ2011
10:38

மும்பை : 2011ம் ஆண்டின் சிறந்த உள்நாட்டு விமான நிறுவனம் விருதை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வென்றுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும் இந்த பிரிவில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று தலைநகர் டில்லியில் நடைபெற்ற விழாவில், இவ்விருதை, ஜெட் ஏர்வேஸ் (கமர்ஷியல் பிரிவு) மூத்த துணை தலைவர் கவுரங் ஷெட்டியிடம், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத் காந்த் ஷகாய் வழங்கினார்.
மற்ற விமான நிறுவனங்களிடமிந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சிறந்த வழித்தடங்கள், சிறந்த கட்டமைப்பு, திறனறிந்து செயல்படுதல், சிறந்த சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாகவும் அதே சமயத்தில் துரிதமாக செயல்படுவதாக நாட்டின் முன்னணி கருத்துகணிப்பு நடத்தும் நிறுவனமான நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தாங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறோம். இந்த விருதின் மூலம், தங்களது சேவைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், தங்களது சேவைகளுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது புலனாகி உள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைமை வணிகப்பிரிவு அதிகாரி சுதீர் ராகவன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|