பதிவு செய்த நாள்
19 நவ2011
15:41

புதுடில்லி : மொபைல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலோ நிறுவனம், ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டெஃபி பிளஸ் மொபைல்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்த மோட்டரோலோ (விற்பனை மற்றும் செயல்பாடுகள் பிரிவு) உயர்அதிகாரி ராஜன் சாவ்லா கூறியதாவது, 7 மணிநேர டாக்டைம், 16 நாட்கள் பேட்டரி ஸ்டாண்ட்பை டைம், 1 ஜிகாஹெர்ட்ஸ் புராசசர், ஜிஞ்சர்பிரெட் எனப்படும் ஆண்டராய்ட் 2.3 பதிப்பிலான ஆபரேடிங் சிஸ்டம், 3.7 இஞ்ச் டச் ஸ்கிரீன் தொடுதிரை, 5 மெகாபிக்சல் கேமரா, 32 ஜிபி வரையிலான நீட்டிக்கத்தக்க மெமரி, அடோப் பிளாஷ் 10 அடிப்படையாகக் கொண்ட பிரவுசர் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட இந்த போனின் விலை ரூ. 19,940 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|