தங்கத்தால் 2 ஆண்டுகளில் அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம்தங்கத்தால் 2 ஆண்டுகளில் அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம் ... ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில் புதிதாக 2.15 லட்சம் வேலை வாய்ப்பு ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில் புதிதாக 2.15 லட்சம் வேலை வாய்ப்பு ...
குறு, சிறு தொழில்களுக்கு தமிழக அரசு வட்டி மானியம் வழங்குமா?:தொழில் முனைவோர் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2011
01:51

குஜராத்தை பின்பற்றி,தமிழக அரசும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு, வட்டிமானியம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, தொழில் முனைவோரிடையே ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 11 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில், 6.90 லட்சம் நிறுவனங்கள் மாவட்ட தொழில் மையங்களில் பதிவு செய்துள்ளவை. இதன்மூலம், 40 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இது, இந்திய அளவில் இதன் பங்களிப்பு 16 சதவீதமாகும்.

இந்நிறுவனங்கள், மோட்டார் வாகனம், மின்சாரம்,மின்னணு, ஜவுளி, தோல், இரும்பு, வார்ப்படம், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 8,000க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றன.இவற்றின் ஆண்டு வர்த்தகம்,32 ஆயிரம் கோடி ரூபாய் வரை உள்ளது.
முதலீட்டு மானியம்: தமிழகத்தில், குறுந்தொழில்கள் தொடங்க, இயந்திர தளவாடங்களின் மதிப்பில்,15 சதவீதம் அல்லது அதிகபட்சம் 3.75 லட்சம் ரூபாய் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.பின்தங்கிய பகுதிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு, இயந்திர தளவாடங்கள் மதிப்பில், 15 சதவீதம் அல்லது அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
சிறப்பு வகை உற்பத்தி நிறுவனங்களான மின்சாரம் மற்றும் மின்னணுசாதனங்கள், தோல் பொருட்கள்,சூரியசக்தி பயன் பாட்டு உபகரணங்கள்,ஏற்றுமதிக்கான தங்கம்மற்றும் வைர நகைகள் மாசு கட்டுப்பாட்டுகருவிகள் உள்ளிட்ட 15 தொழில் களை தொடங்குவதற்கு,15 சதவீதம் அதிகபட்சம்,30லட்சம் ரூபாய் சிறப்பு முதலீட்டு மானியமாக வழங்கப்படுகிறது.

இது தவிர,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நடக்கும் பொருட்காட்சிகளில், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறு வனங்க ளுக்கு, அரங்க வாடகையில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
வட்டி மானியம்: அதேசமயம், குஜராத்தில் முதலீட்டு மானியத்திற்கு பதிலாக,வட்டிமானியம் வழங்கப்படுகிறது. குஜராத் தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க பெறப்படும் வங்கிக் கடன் மீதான வட்டிக்கு7 சதவீதம் மானி யம் அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு,25 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு,1 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இதில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு,7சதவீதமும்,சிறுமற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 5 சதவீதமும் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தொழில் துவங்கினால் கூடுதலாக,1 சதவீதம் வட்டிமானியம் வழங்கப்படுகிறது.மேலும்,குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளை வெளிநாடு களில் சந்தைப்படுத்துவதற்காக, அங்கு நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெறவும் குஜராத் அரசு மானியம் வழங்குகிறது.

இதன் படி, அரங்க வாடகை, தகவல் கையேடு உள்ளிட்டவற்றுக்கான மொத்த செலவில், 50 சதவீதம் என்ற வகையில், அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
குஜராத்தை பின்பற்றி, பல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா, குறு,சிறு தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், அம்மாநிலத்தை போல், தமிழகத்திலும் வட்டி மானியத்தை அமல்படுத்தினால்,குறு,சிறு, நடுத்தர தொழில்கள் அதிகளவில் வளர்ச்சியடையும்.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிக்) மூலம் வழங்கப் படும் கடனில்,3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக் கான தொழில் கொள்கை வெளி யிடப்பட உள்ளது. அதில்,குஜராத்தைப் பின்பற்றி தமிழகத்திலும், வட்டி மானியம் அளிப் பது குறித்து, முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
இதுகுறித்து, "டான்ஸ்டியா' அமைப்பின் துணைத் தலைவர் கே.ஆர்.ஞானசம்பந்தன் கூறும் போது, "குறைந்த மூலதனத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு,குறு,சிறுநிறுவனங்கள் செயல்படுகின்றன.தற் போது, மூலப்பொருட்கள் விலை உயர்வால்,சிறு தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.வங்கிகளும், வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.குஜராத்தைப்பின்பற்றி, வட்டி மானியம் வழங்கினால், அது, தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்' என்றார்.
"ஒளிரும் தமிழகம்':குஜராத்தில், தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக, அம்மாநில அரசின் சார்பில், 30 கோடி ரூபாய் செலவில், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, "வைபரன்ட் குஜராத்' என்ற பெயரில், சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
இதன் மூலம், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள் ஊக்கம் பெறுவதுடன்,பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய, உள்நாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.அதுபோன்று, "ஒளிரும் தமிழகம்' என்ற பெயரில் சர்வ தேச கருத்தரங்கை தமிழகத்திலும் நடத்தினால், முதலீடுகள் குவியும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
-வீ.அரிகரசுதன்-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)