இலவச ஆன்லைன் வீடியோ சேவை : யாகூ அறிமுகம்இலவச ஆன்லைன் வீடியோ சேவை : யாகூ அறிமுகம் ... உரவிலையை குறைக்க நிறுவனங்கள் கோரிக்கை உரவிலையை குறைக்க நிறுவனங்கள் கோரிக்கை ...
மீண்டும் "ஸ்கூட்டர்' சகாப்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2011
10:20

இந்தியாவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஸ்கூட்டர்கள் ஆதிக்கம் காணப்பட்டது. மோட்டார் சைக்கிள் புரட்சி ஏற்பட்ட பிறகு, ஸ்கூட்டர் விற்பனையில் கொடி கட்டி பறந்த பஜாஜ் மற்றும் கைனடிக் போன்ற நிறுவனங்களும், மோட்டார் சைக்கிள் விற்பனையில் கவனம் செலுத்தின. ஆனால், ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் மட்டும் இந்த விஷயத்தில் விதிவிலக்காக இருந்தது. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆக்டிவா ஸ்கூட்டர் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தியாவில் மீண்டும் ஸ்கூட்டர் சகாப்தம் துவங்குவதற்கான அறிகுறி என்பதை மற்ற நிறுவனங்களும் தற்போது உணர தொடங்கியுள்ளன. அந்த வகையில், யமஹா நிறுவனமும், இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையை துவக்க உள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் 500 சிசி திறன் கொண்ட ஜுமா முதல் 500 சிசி திறன் கொண்ட டி-மாக்ஸ் ஸ்கூட்டர் வரை பல ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இந்தியாவை பொறுத்தவரை 100- 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் தான் தேவை என்பதை புரிந்து கொண்டு அந்த வகையில், புதிய ஸ்கூட்டரை, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விற்பனையும் உடனே துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல,இத்தாலி நாட்டை சேர்ந்த பியாஜியோ ஸ்கூட்டர் நிறுவனமும், வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை, அடுத்த ஆண்டு தான் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)