பதிவு செய்த நாள்
03 டிச2011
01:08

புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் அடிப்படை கட்டமைப்புத் துறை 0.1 சதவீதம் என்ற அளவில் மிக குறைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில், இத்துறையின் செயல்பாட்டு வளர்ச்சி, 2.3 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.இத்துறை, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சென்ற அக்டோபர் மாதத்தில் தான், மிகவும் குறைந்த அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதமாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 5.9 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. நாட்டில்,தொழில் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தியில், அடிப்படை கட்டமைப்புத் துறையின் பங்களிப்பு, 37.9 சதவீதமாக உள்ளது என, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|