பதிவு செய்த நாள்
13 டிச2011
09:34

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.10 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 91.73 புள்ளிகள் குறைந்து 15778.62 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 31.00 புள்ளிகள் குறைந்து 4733.60 புள்ளிகளோடு காணப் பட்டது. நேற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிபர அறிக்கையில் அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி சரிவு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 343.11 புள்ளிகள் சரிந்து 15,870.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 102.10 புள்ளிகள் சரிந்து 4764.60 புள்ளிகளாகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|