பதிவு செய்த நாள்
17 டிச2011
15:41

புதுடில்லி: மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக பழசாறுகளின் விலையை 8 சதவீதம் உயர்த்த பழச்சாரு தயாரிப்பு நிறுவனமான ரஸ்னா நிறுவனம் முடிவு செய்துள்ளது. செலவு குறைப்பு நடவடிக்கையாக மார்க்கெட்டிங், பாக்கேஜிங் உள்ளிட்ட பணிகளுக்காக ஆகும் செலவை கட்டுப்படுத்துவதற்காக இம்முடிவு மேற்கொள்ளப்படுவதாக இந்நிறுவம் தெரிவித்துள்ளது. மேலும், தொடர்ந்த சரிவடைந்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு கோடைகாலத்திற்கு முன்பாக தனது தயாரிப்புகள் சிலவற்றின் விலையை 7 முதல் 8 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக ரஸ்னா நிறுவனத்தலைவர் பைருஸ் கம்பட்டா தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்களின் செலவு, மார்கெட்டிங், பாக்டிங் செலவுகளின் விலை ஏற்றம் காரணமாக ரஸ்னா நிறுவனம் பழச்சாறுகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. தொடர் பணவீக்கம் மற்றும் டாலரின் மதிப்பு குறைவு போன்ற காரணங்களினால் இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. என்று ரஸ்னா நிறுவனத்தின் தலைவர் புருகும்பட்டா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|