பதிவு செய்த நாள்
03 ஜன2012
14:28

சென்னை : சேவை வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான இரு காலாண்டுகளுக்கு, சேவை வரி கணக்கை, கடந்த மாதம் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இக்காலக்கெடு, வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை, சேவை வரி அலுவலக கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த அக்., 1ம் தேதி முதல், சேவை வரி கணக்கை, 'ஆன்-லைனில்' தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி கணக்கு தாக்கல் செய்வோர், தங்களுக்கான பயனர் குறியீடு, 'பாஸ்வேர்டு' ஆகியவற்றை பயன்படுத்தி, http://www.aces.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சிவகாசி, நாகர்கோவில், ஓசூர் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் உள்ள உதவி மையங்களையும், வரி செலுத்துவோர் நாடலாம். இம்மையங்கள் குறித்த தகவல்களை, துறை இணையதளத்தில் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|