பதிவு செய்த நாள்
04 ஜன2012
11:19

சென்னை:சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, நேற்று துவங்கி, 70 நாட்கள் நடக்கிறது.சென்னை தீவுத்திடலில், 38 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, நேற்று மாலை சுற்றுலாத் துறை அமைச்சர், கோகுல இந்திரா துவக்கி வைத்தார்.இப்பொருட்காட்சியில், தமிழக அரசு துறைகள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த, 40 அரங்குகள், மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகளின், ஆறு அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. பொழுதுபோக்கிற்கு ராட்சச சாகச விளையாட்டு அரங்குகள், சிறுவர் விளையாட்டுகள், நவீன கேளிக்கை சாதன அரங்குகள் , வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், பல்வேறு மாநில உணவுகள் தயாரித்து வழங்கும் உணவகங்கள் என, 60க்கும் மேற்பட்ட ஸ்டால்களும் இடம்பெற்றுள்ளன. இத்துடன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உணவகத்தில் பலவிதமான உணவுகளை தயாரித்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொருட்காட்சி நடக்கும், 70 நாட்களிலும், நிகழ்ச்சி அரங்கில் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் மாலை, 6 மணிக்கு நாட்டியம், நாடகம், இன்னிசை கச்சேரியுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இத்துடன் ஒடிசா, ராஜஸ்தான், அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், புதுச்சேரி, நாகாலாந்து மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பொருட்காட்சிக்கு பெரியவர்களுக்கு, 15 ரூபாயும், சிறுவர்களுக்கு, 10 ரூபாயும், மாணவ, மாணவியருக்கு, 5 ரூபாயும் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|