ரயில்வே கையாண்ட சரக்குரூ.49,209 கோடியாக வளர்ச்சிரயில்வே கையாண்ட சரக்குரூ.49,209 கோடியாக வளர்ச்சி ... ராஜிவ் வீட்டு வசதி திட்டம் ரூ.7,500 கோடியில் வீடுகள் ராஜிவ் வீட்டு வசதி திட்டம் ரூ.7,500 கோடியில் வீடுகள் ...
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில்...நாட்டின் பொது பணவீக்கம் 7.47 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2012
00:08

புதுடில்லி: நாட்டின் பொது பணவீக்கம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சென்ற டிசம்பர் மாதத்தில், 7.47 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில், 9.11 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.இரண்டு ஆண்டுகள்
நாட்டின் பொது பணவீக்கம், கடந்த 2010ம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில், 9.45 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. மேலு<ம், இது கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில், 7.15 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. அதற்கடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான், பொது பணவீக்கம் இந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு மாதத்தில், ஆண்டுக்கணக்கில் ஒப்பிடுகையில், காய்கறிகள் விலை 34.18 சதவீதமும், கோதுமை விலை 3.81 சதவீதமும் சரிவடைந்திருந்தது. உருளைக்கிழங்கு (35.45 சதவீதம்), வெங்காயம் (60.45 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் குறைந்திருந்தது.சென்ற டிசம்பர் மாதத்தில், உணவுப் பொருட்களின் விலை 0.74 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில், 8.54 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. மொத்த விலைக் குறியீட்டு எண் (டபிள்யூ.பி.ஐ.) கணக்கிடுவதில், உணவுப் பொருட்களின் பங்களிப்பு 14.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. முக்கிய பொருட்களுக்கான பணவீக்கம் 3.07 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில், 8.53 சதவீதமாக அதிகரித்திருந்தது.சென்ற டிசம்பரில், உணவுப் பொருட்கள் அல்லாத பிரிவின் கீழ், நூலிழை, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றிற்கான பணவீக்கம் 1.48 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதத்தில், 3.22 சதவீதம் என்ற அளவில் <உயர்ந்து காணப்பட்டது.
தயாரிப்பு துறைதயாரிப்பு துறை பொருட்களுக்கான பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் மொத்த விலை குறியீட்டு எண் கணக்கிடுவதில், இத்துறையின் பங்களிப்பு 65 சதவீதம் என்ற அளவில் <உள்ளது. சென்ற டிசம்பரில், ஆண்டுக்கணக்கில், தயாரிப்பு துறை பொருட்களுக்கான பணவீக்கம் 7.41 சதவீதமாகவும், இது நவம்பரில் 7.70 சதவீதம் என்ற அளவிலும் காணப்பட்டது. இத்துறைக்கான பணவீக்கம் சென்ற 2011ம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து, 6 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.
தயாரிப்பு துறையின் கீழ், <உருக்கு மற்றும் இடைநிலைப் பொருட்களுக்கான பணவீக்கம் 24.44 சதவீதமும், சமையல் எண்ணெய்கான பணவீக்கம் 11.52 சதவீதமும் உயர்ந்துள்ளன. இவை தவிர, ஆண்டுக்கணக்கில், புகையிலை பொருட்களுக்கான பணவீக்கம் 13.18 சதவீதம் என்ற அளவிலும், அடிப்படை உலோகங்களுக்கான பணவீக்கம் 12.96 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளன.சென்ற டிசம்பர் மாதத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம் 14.91 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நவம்பரில், 15.48 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. மறு மதிப்பீடு
மேலும், மறு மதிப்பீட்டில், சென்ற அக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம், 9.73 சதவீதத்திலிருந்து, 9.87 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தற்போது, பொது பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கக் கூடும் என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, நாட்டின் பொதுப் பணவீக்கம், 8 சதவீதத்திற்கும் அதிகமாகவும், டிசம்பர் மாதத்திலிருந்து, 9 சதவீதத்திற்கு அதிகமாகவும் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 2010ம் ஆண்டு மார்ச் முதல், தற்போது வரையிலுமாக, 13 முறை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, வங்கிகள் வழங்கும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனங்களின் வட்டி செலவினம் அதிகரித்து, விரிவாக்க திட்டங்கள் மற்றும் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, முந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவு. வட்டி விகிதம்
பணவீக்கம் குறைந்து வருவதையடுத்து, ரிசர்வ் வங்கி, சென்ற நவம்பரிலிருந்து, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தவில்லை. மேலும், இது, நடப்பாண்டு மார்ச் மாதத்தில், 7 சதவீதத்திற்கு வரும் என மதிப்பீடு செய்துள்ளது. இது குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'உணவுப் பொருள் பணவீக்கம் மற்றும் பொது பணவீக்கம் குறைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதையடுத்து, மார்ச் இறுதியில் பொதுப் பணவீக்கம் 6 - 7 சதவீதமாக குறையும்,' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)