வணிகவரித் துறையை கணினிமயமாக்க ரூ.230 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவுவணிகவரித் துறையை கணினிமயமாக்க ரூ.230 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு ...
பூண்டு சாகுபடியில் உரிய விலை : வத்தலக்குண்டில் வணிக மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2012
11:45

திண்டுக்கல் : பூண்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், குழுக்கள் அமைக்க வேளாண் விற்பனை வணிக துறை முடிவு செய்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியான வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி கிராமங்களில் 650 எக்டேர் பரப்பில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. பூண்டு பயிர் ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர் ஆகிய இரு பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் 3300 டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
பூண்டு பயிர் சாகுபடியில் 3000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பூண்டு பயிருக்கு கொடைக்கானலில் சந்தை வசதியில்லை. இதனால் தேனி மாவட்டம் வடுகபட்டியில் இயங்கும் பூண்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கு கமிஷன் கடைக்காரர்கள் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடை அளவுகளிலும் வித்தியாசம் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மாவட்ட வேளாண் விற்பனை வணிகத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பூண்டு விவசாயிகள், 15 முதல் 20 பேர் கொண்ட குழு அமைத்து, பூண்டு பதப்படுத்தும் வணிக நிறுவனங்களிடம் ஒப்பந்த பண்ணையம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, வத்தலக்குண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ஊரக வணிக மையம் அமைய உள்ளது.
இங்கு வணிக நிறுவனங்கள் மூலம் பூண்டு கொள்முதல் செய்யப்படும். இந்த மையத்தில் இடைத்தரகர் இல்லாததால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். கொடைக்கானல் பகுதி பூண்டு விவசாயிகள் தங்களது பகுதிகளில் குழுக்கள் அமைத்து பயன்பெறலாம், என, வேளாண்மை விற்பனை வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)