பதிவு செய்த நாள்
21 ஜன2012
16:11

சென்னை: அரசு மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது பணியின் காரணமாக நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது குடும்ப அட்டைகளை பணி நாட்களில் புதுப்பிக்க இயலவில்லை என்றும், எனவே தங்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர். இதன்படி, வரும் ஜனவரி 22, 29 , பிப்ரவரி 5 மற்றும் 12 தேதிகளில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும். குடும்ப அட்டைகளைப் புதுப்பித்தல் மற்றும் பொருள்கள் வழங்கும் பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜனவரி 23,30, பிப்ரவரி 6,13 ஆகிய தேதிகளில் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு விடுமுறை தினங்களாக அறிவித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|