பதிவு செய்த நாள்
04 பிப்2012
11:23

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியில் இறால்பாடு குறைந்ததால், வாவல் மீன்கள் கிலோ 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் கடல் பகுதியில் இறால் மீன்கள் அதிக அளவில் கிடைக்கிறது. அவை பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது இறால் மீன் பாடு குறைந்து வருகிறது. ஒரு முறை கடலுக்கு சென்றால், 50 கிலோ வரை பிடித்து வந்த மீனவர்களுக்கு, 15 முதல் 20 கிலோ அளவிலான இறால்களே கிடைக்கின்றன. ஒரு கிலோ இறால் மீன்கள் 500 முதல், 550 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், வாவல் மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. ஐ வாவல் மீன்கள் கிலோ 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெள்ளை வாவல் மீன்கள் கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீனவர் ஒருவர் கூறியதாவது: இறால் மீன்கள் பிடித்து வந்தால், டீசலுக்கே கட்டுப்படியாவதில்லை. வாவல் மீன் பிடிப்பவர்களுக்குத் தான் நல்ல வருமானம். ஒரு படகுக்கு 50 முதல் 100 கிலோ வரை வாவல் கிடைக்கிறது, என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|