பதிவு செய்த நாள்
07 பிப்2012
14:51

மும்பை: இந்திய விமான துறையில், பிரகாசமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு, இந்தியாவில், தகவல்தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, மருத்துவம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் போன்ற துறைகளில் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில், பாதுகாப்பு அமைச்சகம், 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் விமானங்களை வாங்க <உள்ளதால், இந்திய விமான துறையிலும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து விமானங்களுக்கான ஆர்டர்களைப் பெறும் அயல்நாட்டு நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், விமான வடிவமைப்பு, உதிரிபாகங்கள் தயாரிப்பு என பலதரப்பட்ட தொழில் சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெறுவர். அதே சமயம், உள்நாட்டு விமான போக்குவரத்து துறையும் விரைவாக வளர்ச்சி கண்டு வருவதால், அடுத்த சில ஆண்டுகளில், இத்துறையிலும் வேலைவாய்ப்பு பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|