பதிவு செய்த நாள்
11 பிப்2012
00:07

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் முக்கிய பொருட்கள் இறக்குமதி, 67 ஆயிரத்து 264 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 42.3 சதவீதம் (47 ஆயிரத்து 260 கோடி ரூபாய்) அதிகமாகும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.பால் மற்றும் பால் பொருட்கள், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள், பழம், காய்கறிகள் போன்றவை முக்கிய பொருட்கள் பிரிவின் கீழ் வருகின்றன. நாட்டின் மொத்த இறக்குமதியில், இவற்றின் பங்களிப்பு, 4.7 சதவீதம் என்றளவில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 18 ஆயிரத்து 890 கோடியிலிருந்து, 31 ஆயிரத்து 66 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி முறையே, 64.6 சதவீதம் மற்றும் 63.7 சதவீதம் அதிகரித்துள்ளது.நாட்டின் முக்கிய பொருட்கள் இறக்குமதியில், இந்தோனேஷியா, சீனா, மலேசியா, அர்ஜென்டினா, ஜெர்மனி, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, கனடா, மியான்மர், ஜப்பான், தாய்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.அதேசமயம், பிரேசில், ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து குறைந்தளவிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.ஆனால், மத்திய அரசின் வருவாய் குறைந்துள்ள நிலையில், நிலைக்குழுவின் பரிந்துரைகளை நிதியமைச்சகம் எந்த அளவிற்கு ஏற்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|