முக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் அதிகரிப்புமுக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் அதிகரிப்பு ... மகிந்திரா அண்டு மகிந்திரா டிராக்டர் விற்பனை சரிவு மகிந்திரா அண்டு மகிந்திரா டிராக்டர் விற்பனை சரிவு ...
நாட்டின் ஜவுளி துறை வர்த்தகம் ரூ.5.75 லட்சம் கோடியை தாண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2012
00:08

புதுடில்லி: நாட்டின் ஜவுளி துறை வர்த்தகம், 16 சதவீதம் வளர்ச்சி கண்டு, நடப்பாண்டு இறுதியில், 11 ஆயிரத்து 500 கோடி டாலரை (5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்) தாண்டும் என, "அசோசெம்' அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.தற்போது, இத்துறையின் சந்தை மதிப்பு, 5,500 கோடி டாலராக (2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்) உள்ளது. இதில், உள்நாட்டின் பங்களிப்பு 64 சதவீதமாக உள்ளது.நாட்டின் தொழில் உற்பத்தியில், ஜவுளி துறையின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.), 4 சதவீத பங்களிப்பையும், ஏற்றுமதி வருவாயில், 17 சதவீத பங்களிப்பையும் ஜவுளித் துறை கொண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், 2,800 -3,000 கோடி டாலர் மதிப்பிற்கு, ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜவுளி வகைகளுக்கு, கனடா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சவுதி அரேபியா, கொரியா, வங்கதேசம், துருக்கி போன்ற நாடுகள் முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன. இந்திய ஆயத்த ஆடைகளின் மொத்த ஏற்றுமதியில், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றில் இரண்டு பங்கை கொண்டுள்ளன.ஜவுளிக்கு அதிக தேவைப்பாடு உள்ளதால், அத்தொழில் சார்ந்த, இயந்திரங்கள், உபகரணங்கள் போன்ற துணை தொழில்களில் வேலைவாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமங்களில் வேலைவாய்ப்பு அதிக அளவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், பல மாநிலங்களில் ஜவுளித் துறைக்கு தேவையான இயந்திரங்கள், உதிரிப் பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.நூற்பாலை இயந்திரங்கள், அது சார்ந்த உபகரணங்கள் மற்றும் ஜவுளி ஆய்வு சாதனங்கள் தயாரிப்பில், தமிழகம் சிறந்து விளங்குகிறது.குஜராத் மாநிலம், செயற்கை நூலிழை இயந்திரங்கள் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது.அகமதாபாத், பெங்களூர், கோவை, லூதியானா, மும்பை, சூரத் ஆகிய ஆறு இடங்களில், தயாரிக்கப்படும் இவ்வகை ஜவுளி இயந்திரங்கள் வாயிலான வர்த்தகம் 5,010 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீ (டி.இ.ஐ.) அமைப்பு, 1,446 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில், 598 நிறுவனங்கள் முழுமையான இயந்திரங்களின் தயாரிப்பிலும், 848 நிறுவனங்கள், ஜவுளி இயந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் துணை பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12), சர்வதேச அளவிலான ஜவுளி வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு, 7 சதவீதம் என்றளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2009-10ம் நிதியாண்டில், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஜவுளி ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டது. இருப்பினும், சென்ற 2010-11ம் நிதியாண்டில், ஜவுளி ஏற்றுமதியில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)