பதிவு செய்த நாள்
13 பிப்2012
12:04

புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் (ஏப்ரல்-ஜனவரி) இந்திய ரயில்வே துறை ஈட்டிய வருவாய் ரூ.84,155 கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.76,223 கோடியாக இருந்தது. ஆக, வருவாய் 10.41 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் 10 மாதங்களில் ரயில்வே துறை சரக்குப் போக்குவரத்து வாயிலாக ஈட்டிய வருவாய் 10.47 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.50,916 கோடியிலிருந்து ரூ.56,247 கோடியாக உயர்ந் துள்ளது. பயணிகள் வாயிலாக ஈட்டப்பட்ட வருவாய் 9.41 சதவீதம் உயர்ந்து ரூ.23,345 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் ரயில்களில் சென்ற பயணிகளின் எண்ணிக்கை 657.70 கோடியிலிருந்து 691.20 கோடியாக உயர்ந்துள்ளது. புறநகர் ரயில்களில் பயணித்தோர் எண்ணிக்கை 365.20 கோடியாகவும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 326 கோடியாகவும் உள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும் வளர்ச்சி முறையே 3.60 சதவீதம் மற்றும் 6.80 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|