பதிவு செய்த நாள்
18 பிப்2012
01:51

புதுடில்லி:நாட்டின் கோதுமை உற்பத்தி, நடப்பு பயிர் பருவத்தில் (ஜூன்-ஜூலை), 8.8 கோடி டன்னாக உயர்ந்து புதிய சாதனை படைக்கும் என, மத்திய உணவு அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்ற பயிர் பருவத்தில் கோதுமை உற்பத்தி 8.68 கோடி டன்னாக இருந்தது. நடப்பு பருவத்தில், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் நோய் தாக்குதல் காரணமாக கோதுமை பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோதுமை விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.
கோதுமை உற்பத்தி, மதிப்பீட்டை விட முன்னேற்றம் காணும். அதனால் கோதுமை உற்பத்தியில் எந்த பிரச்னையும் இல்லை.ஆனால், தேவைக்கேற்ப பருப்பு வகைகள் உற்பத்தி இல்லாதது கவலை அளிக்கிறது. தேவைக்கும், அளிப்பிற்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பொருட்கள் உற்பத்தி சிறப்பாகவே உள்ளது.
ஆனால், இரண்டு துறைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதில் பருப்பு வகைகள் ஒன்றாகும். நடப்பு பருவத்தில், பருப்பு உற்பத்தி 1.67 - 1.70 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி மூலம் கூடுதல் தேவை சமாளிக்கப்படும்.
2009-10ம் ஆண்டு வரை நாட்டின் பருப்பு வகைகளின் உற்பத்தி 1.40 கோடி டன்னாக இருந்தது. இது, 2010-11ம் ஆண்டில் 1.82 கோடி டன்னாக அதிகரித்தது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாட்டின் 63.5 சதவீத மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|