பதிவு செய்த நாள்
18 பிப்2012
01:47

மும்பை:நாட்டின் சேவைகள் துறையின் ஏற்றுமதி, சென்ற டிசம்பர் மாதத்தில், 1,118 கோடி டாலராக (55 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 0.8 சதவீதம் என்ற அளவில் (1,128 கோடி டாலர் - 56 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) குறைவு என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைகள் துறை, 55 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கி, நாட்டின் சேவைகள் துறையின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான தற்காலிக புள்ளி விவரத்தை, 45 நாட்களுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது.
சேவை துறையின் கீழ், தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர், பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும் பீ.பி.ஓ. சேவை, விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், சேவைகள் துறையின் ஏற்றுமதி, 10 ஆயிரத்து 178 கோடி டாலராகவும் (5 லட்சத்து 8 ஆயிரத்து 900 கோடி ரூபாய்), இறக்குமதி, 6,261 கோடி டாலராகவும் (3 லட்சத்து 13ஆயிரத்து 50 கோடி ரூபாய்) உள்ளது என, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|