நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கம் 7.65 சதவீதம்நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கம் 7.65 சதவீதம் ... வெள்ளி கிலோ ஒரு லட்சத்தை எட்டுகிறது வெள்ளி கிலோ ஒரு லட்சத்தை எட்டுகிறது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ரூ.12,191 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2012
02:16

கொச்சி:நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், மதிப்பின் அடிப்படையில், 12 ஆயிரத்து 191 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடுகள்: இந்திய கடல் உணவுப் பொருட்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக தேவைப்பாடு உள்ளது. கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், இறால், மீன் ஆகியவற்றின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 12 ஆயிரத்து 191 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 21.68 சதவீதம் (10 ஆயிரத்து 18 கோடி ரூபாய்) அதிகம்.
மதிப்பீட்டு காலத்தில், அளவின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 1.48 சதவீதம் வளர்ச்சிகண்டு, 6 லட்சத்து 12 ஆயிரத்து 505 டன்னிலிருந்து, 6 லட்சத்து 21 ஆயிரத்து 577 டன்னாக உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பின் அடிப்படையில் இவற்றின் ஏற்றுமதி, 18.72 சதவீதம் வளர்ச்சியடைந்து, 221 கோடி டாலரிலிருந்து, 263 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி வாயிலான அன்னியச் செலாவணி வருவாயில், இறால்களின் பங்களிப்பு, 51.35 சதவீதம் என்றளவில் உள்ளது. அளவு, ரூபாய் மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி முறையே, 17.67 சதவீதம், 34.77 சதவீதம், 32.98 சதவீதம் அதிகரித்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு, இறால் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், அளவின் அடிப்படையில் அமெரிக்காவின் பங்களிப்பு, 38.34 சதவீதம் என்றளவில் உள்ளது.
ரூபாயின் வெளிமதிப்பு:இந்நாட்டிற்கு ரூபாய் மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட ஏற்றுமதி முறையே, 41.97 சதவீதம் மற்றும் 41.07 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், ஏற்றுமதி அதிகரித்ததற்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்ட சரிவே காரணம் என கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டிற்கான இறால் ஏற்றுமதி, அளவு, ரூபாய் மற்றும் டாலர் மதிப்பு அடிப்படையில் முறையே, 10.15 சதவீதம், 19.40 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது. மீன்கள் ஏற்றுமதியும், மதிப்பின் அடிப்படையில், 39.43 சதவீதமும், அளவு மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில், 19.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி சந்தையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பு, முதன் முறையாக டாலர் மதிப்பின் அடிப்படையில், 39.58 சதவீதம் உயர்ந்துள்ளது. அளவின் அடிப்படையில், இது, 25.75 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், இந்நாடுகளுக்கான கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 43.19 சதவீதமும், ரூபாய் மற்றும் டாலர் மதிப்பில் முறையே, 103.7 சதவீதம் மற்றும் 95.99 சதவீதம் என்றளவில் வளர்ச்சிகண்டுள்ளது.
சந்தைப் பங்களிப்பு :கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகளின் சந்தைப் பங்களிப்பு 22 சதவீதமாக சரிவடைந்துள்ளது. மேலும், அமெரிக்கா (19 சதவீதம்), ஜப்பான் (14 சதவீதம்), சீனா (7 சதவீதம்), மேற்கு ஆசிய நாடுகள் (4 சதவீதம்), இதர நாடுகள் (8 சதவீதம்) என்ற அளவில் சந்தை பங்களிப்பைக் கொண்டுள்ளன.ஐரோப்பிய நாடுகளுக்கு, கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 13.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், டாலர் மதிப்பு அடிப்படையில், 1.3 சதவீதம் குறைந்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)