பதிவு செய்த நாள்
24 பிப்2012
02:01

புதுடில்லி:சென்ற அக்டோபர் முதல் இதுவரை, இந்தியாவிலிருந்து, 5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிக அளவிலான சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டதாக, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் சர்க்கரை உற்பத்தியில், பிரேசிலுக்கு அடுத்த இடத்தில், இந்தியா உள்ளது. நடப்பு சந்தை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாகவும், தேவை 2.20 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, நடப்பு சர்க்கரை பருவத்தில், இரண்டு கட்டங்களாக, 20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதில், முதற்கட்டமாக, இதுவரையில், 5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தி யாவிலிருந்து, ஆப்ரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அதிகளவில் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சென்ற 2010-11ம் ஆண்டின் சந்தை பருவத்தில், இந்தியாவிலிருந்து, 26 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|