பதிவு செய்த நாள்
08 மார்2012
16:30

விமானத்திற்கு தேவையான எரிபொருளுக்கு உடனுக்கு உடன் பணம் தர கிங்பிஷர் விமான நிறுவனம் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து எரிபொருள் சப்ளை செய்ய இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சம்தம் தெரிவித்துள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் கிங்பிஷர் நிறுவனத்திற்கு நாளுக்கு நாள் பிரச்னை வலுத்து கொண்டே போகிறது. கிங்பிஷர் விமானத்திற்கு நீண்டகாலமாக எரிபொருள் வழங்கி வருகிறது இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம். இந்நிலையில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்கு தர வேண்டிய பாக்கி பணத்தை கிங்பிஷர் நிறுவனம் செலுத்தவில்லை. இதனையடுத்து எரிபொருள் சப்ளை செய்வதை இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் நிறுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட கிங்பிஷர் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் தான் தினசரி வாங்கும் எரிபொருளுக்கு அன்றைய தினமே பணத்தை செலுத்தி விட ஒப்புக் கொண்டதை அடுத்து, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட், மீண்டும் எரிபொருளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|