டீசல் மானியம் தொடருமா? விலையை உயர்த்த புதிய உத்திடீசல் மானியம் தொடருமா? விலையை உயர்த்த புதிய உத்தி ... பி.எப்., வட்டி8.25 சதவீதமாககுறைப்பு பி.எப்., வட்டி8.25 சதவீதமாககுறைப்பு ...
பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பீடு : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
00:23

புதுடில்லி : ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட்டிற்கு முன்பாக சமர்ப்பிக்கப்படும், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார்.
நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வரும் 2012-13ம் நிதியாண்டில், 7.6 சதவீதமாகவும், 2013-14ம் நிதியாண்டில், 8.6 சதவீதமாக இருக்கும் என முகர்ஜி தெரிவித்தார்.
சர்வதேச சூழ்நிலைகளால், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், நடப்பு நிதியாண்டின் பெரும்பாலான மாதங்களில் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டது. இது போன்ற காரணங்கள், ஒட்டுமொத்த அளவில், பொருளாதார வளர்ச்சியிலும், தொழில் துறை உற்பத்தியிலும் தேக்க நிலையை ஏற்படுத்தியது.
பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை உயர்த்தியது. இதனால், நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுவும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் பின்னடைவை உருவாக்கியது.
ஏற்றுமதி : நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நாட்டின் ஏற்றுமதி 40.50 சதவீதமும், இறக்குமதி 30.4 சதவீத அளவிற்கும் அதிகரித்திருந்தது. நடப்பு முழு நிதியாண்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4-5 சதவீதம் என்ற குறைந்த அளவிற்கே இருக்கும்.அதேசமயம், சேவை துறையின் வளர்ச்சி 9.4 சதவீதம் என்ற அளவிலும், வேளாண் துறையின் வளர்ச்சி 2.5 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என பொருளதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை : பொருளாதார ஆய்வறிக்கை என்பது, குறிப்பிட்ட ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி, அன்னிய முதலீடுகள், பணவீக்கம், வேளாண் மற்றும் உற்பத்தி துறைகளின் செயல்பாடு போன்றவை குறித்த தகவல்களை கொண்டதாகும். இந்த ஆய்வு அறிக்கைக்கு ஏற்ப, அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொருளாதார ஆய்வறிக்கையின் வாயிலாக, எதிர்வரும் மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள, இது ஓர் அளவு கோளாக கருதப்படுகிறது.
ரூபாயின் வெளிமதிப்பு : நடப்பு நிதியாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மாதாந்திர அடிப்படையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 12.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டில் பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு குறைந்து போனது. இதுவும், ரூபாயின் வெளிமதிப்பு சரிவிற்கு காரணம்.
நிதிப் பற்றாக்குறை : அரசின் செலவினம் அதிகரித்து, பட்ஜெட் மதிப்பீட்டை விட வருவாய் குறைந்ததால், நிதிப்பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜன., - டிச.,) மொத்த வரி வருவாய், 12.2 சதவீதம் என்றளவில்தான் வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில், வரி வருவாய் வளர்ச்சி, 17.3 சதவீதமாக இருக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, நடப்பு நிதியாண்டில், அரசின் மொத்த செலவினம் 4.9 சதவீதம் என்றளவில் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாத காலத்தில், செலவினம் 13.9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு, திட்டமிடப்படாத அரசின் செலவினம் அதிகரித்ததுதான் முக்கிய காரணம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், அரசின் ஒட்டு மொத்த செலவினம், 8 லட்சத்து 96 ஆயிரத்து 361 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, நடப்பு முழு நிதியாண்டிற்கு, திட்டமிடப்பட்டிருந்த மொத்த செலவினமான, 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடியில், 71.3 சதவீதமாகும்.
இதே காலத்தில், அரசின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டில், 7 லட்சத்து 89 ஆயிரத்து 892 கோடி ரூபாயாக இருக்குமென பட்ஜெட் மதிப்பீட்டில் கூறப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில், 4 லட்சத்து 98 ஆயிரத்து 491 கோடி ரூபாய் அளவிற்கே வருவாய் கிடைத்துள்ளது. இது, மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில், 63.1 சதவீதமாகும்.
நடப்பு முழு நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறை : 3 லட்சத்து 7,270 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், முதல் ஒன்பது மாத காலத்திலேயே, வருவாய் பற்றாக்குறை 2 லட்சத்து 86 ஆயிரத்து 104 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மொத்த வருவாய் பற்றாக்குறையில் 93.1 சதவீதமாகும்.
இதே போன்று நிதி பற்றாக்குறையும், 4 லட்சத்து 12 ஆயிரத்து 817 கோடி ரூபாயாக இருக்குமென பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், முதல் ஒன்பது மாத காலத்தில், நிதி பற்றாக்குறை 3 லட்சத்து 81 ஆயிரத்து 12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில், 92.3 சதவீதமாகும்.
வேளாண் துறை : வரும் 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் துறை உற்பத்தி, சிறப்பாக இருக்குமென ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (2011-12), 25 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்திட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டிற்கு எவ்வித முன்னேற்றத்தையும் அளிக்காத தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்.
அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில், திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து மூலதனத்தைப் பெறும் வகையில் திட்டங்கள் அமல்படுத்த வேண்டும். நாட்டின் பணவீக்கம் குறையும் நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது : நாட்டின் பொருளாதார மந்த நிலையிலும், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, வேலை வாய்ப்புத் துறை வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற 2011ம் ஆண்டு செப்டம்பர் வரையில் ஓராண்டு காலத்தில், 9 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இதில், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றித் தரும் பீ.பி.ஓ துறைகளில் மட்டும் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது. அடுத்த இடங்களில் உலோகம் (1.07 லட்சம்), வாகனம் (71 ஆயிரம்), நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (8,000), தோல் (7,000) ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டமும், வேலை வாய்ப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் முதல், 2011ம் ஆண்டு செப்டம்பர் வரை அனைத்து துறைகளிலும் 23.58 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)