பதிவு செய்த நாள்
31 மார்2012
16:49
நியூயார்க்: அமெரிக்காவில் வெளியாகும் பார்ச்சூன் இதழ் உலகளவில் தொழில் துறையின் பல்வேறு சிறப்புகளை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், உலகின் புகழ்பெற்ற 12 தொழில்முனைவோர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.தொழில் பின்னணி எதுவுமே இல்லாமல் சிறிய அளவில் தொழில் முனைவோராக தனது வாழ்க்கையை துவக்கி, உலகமே திரும்பிப் பார்க்கும் வகை யில் சிறந்த தொழிலதிபராக மாறியவர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.இந்த பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியரும், சாப்ட்வேர் துறையில் கொடிகட்டி பறப்பவருமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி (65) 10வது இடத்தை பிடித்துள்ளார்.இன்போசிஸ் நிறுவனத்தை, நாராணயமூர்த்தி 5 நண்பர்களுடன் இணைந்து துவக்கினார். எனினும், இவருடைய முழு முயற்சியின் காரணமாகவே நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இந்நிறுவனத்தை வளர்த்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|