உரம் இறக்குமதி 7 சதவீதம் குறைந்ததுஉரம் இறக்குமதி 7 சதவீதம் குறைந்தது ... புதிய தொழில் முனைவோருக்கு 'டிக்' முன்னுரிமை: புதிய தொழில் முனைவோருக்கு 'டிக்' முன்னுரிமை: ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உலகளவில் இயற்கை ரப்பருக்கான தேவை உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2012
00:21

கொச்சி:நடப்பு 2012ல், உலகளவில், ரப்பருக்கான தேவை, உற்பத்தியை விட அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் ரப்பர் அதிகளவில் உற்பத்தியாகும் ஒரு சில நாடுகளில், இதன் உற்பத்தி கடந்தாண்டை விட குறையும். அதேசமயம், இதற்கான தேவை அதிகரிக்கும் என, இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், சர்வதேச அளவில், ரப்பர் பயன்பாடு, 4.7 சதவீதம் அதிகரிக்கும் என்றும், இது, கடந்தாண்டை விட, 1.4 சதவீதம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு 2012ல், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ரப்பருக்கான தேவை 3.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்ற ஜனவரி மாதத்தில், இயற்கை ரப்பரின் விலை அதிகரித்திருந்த நிலையிலும், தாய்லாந்து நாட்டில் இதன் உற்பத்தி, 3 லட்சத்து 85 ஆயிரம் டன்னிலிருந்து, 2 லட்சத்து 91 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.மேலும் இந்தோனேசியாவின் ரப்பர் உற்பத்தி, இதே மாதங்களில், 2 லட்சத்து 47 ஆயிரம் டன்னிலிருந்து, 2 லட்சத்து 39 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.
மலேசியாவில், காலம் கடந்த மழை பொழிவால், ரப்பர் பால் வடிப்பு பணி பாதிப்புக்குள்ளானது. இதனால், மலேசியாவின் ரப்பர் உற்பத்தி, 1 லட்சத்து 8,700 டன்னிலிருந்து, 85 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.அதேசமயம், இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ரப்பர் உற்பத்தி, ஓரளவிற்கு அதிகரித்திருந்தது.
மேலும், சீனாவில், அதிகளவில் ரப்பர் விளையும் பகுதிகளிலும், அதிக மழை பொழிவு மற்றும் பூஞ்சை நோய் தாக்குதலால், ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சீனாவில் கடந்த ஒரு சில மாதங்களாக, ரப்பருக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில் நடப்பு ஆண்டில், இயற்கை ரப்பர் அளிப்பு 1,042 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டில், 1,053 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
சர்வதேச மோட்டார் வாகனங்கள் தாயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், லாரிகள் மற்றும் பஸ் டயர்கள் உற்பத்தி சென்ற ஜனவரி மாதத்தில், கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பயணிகள் கார் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கான டயர் உற்பத்தி முறையே 5 சதவீதம் மற்றும் 1 சதவீதம் என்றளவில் குறைந்திருந்தது.
அதேசமயம், நடப்பாண்டில், இந்தியாவில் ரப்பர் உற்பத்தி, கடந்த 2011ம் ஆண்டை விட, 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இதன் உற்பத்தி, அதற்கு முந்தைய ஆண்டை விட 4.9 சதவீதம் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)