பதிவு செய்த நாள்
22 ஏப்2012
14:54

ஈரோடு: கோடையில் முட்டை கோஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வரத்தும் கணிசமாக குறைந்து வருகிறது. தேவை அதிகரித்துள்ள நிலையில் விலையும் அதிகரித்துள்ளது.
பெங்களூரு, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தாளவாடி, ஊட்டி ஆகிய பகுதியில் முட்டை கோஸ் அதிக பரப்பளவில் சாகுபடி செய்கின்றனர். இங்கிருந்து மாநிலம் முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. வரத்தின் அடிப்படையில் காய்கறி டீலர்கள் விலை நிர்ணயம் செய்கின்றனர். கோடை வெயில் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்கள் நீர் ஆதாரமின்றி வறண்டு கிடப்பதால், விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு முட்டைகோஸ் வரத்தும் கணிசமாக குறைந்து வருகிறது.
ஈரோட்டுக்கு வழக்கமாக, தினசரி ஐந்து லோடு வரை வரத்தானது, தற்போது வாரத்துக்கு மூன்று முறை தலா ஏழு லோடு வருகிறது. ஹோட்டல்களில் பிரைடு ரைஸ், எக் ரைஸ் போன்றவற்றுக்கு முட்டை கோஸ் அதிகம் பயன்படுத்துவர். சைவப் பிரியர்களும் விரும்பி வாங்கிச் செல்வர். இதனால் தேவை அதிகரித்து, விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில், சென்ற வாரம் முட்டை கோஸ் கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது. நேற்று ஈரோடு உழவர் சந்தையில், 32 ரூபாய்க்கும், நேதாஜி மார்க்கெட்டில் 35 ரூபாய்க்கும் விற்றது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|