பதிவு செய்த நாள்
25 ஏப்2012
12:36

புதுடில்லி: பெட்ரோல் விலையை போல் டீசல் விலையையும் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு சம்மதம் வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயணன் மீனா கூறியிருப்பதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக டீசல் விலையை உயர்த்த அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இருந்தும் 2012-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை காரணமாக அரசின் நிதிப் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது போல டீசலுக்கும் இதே முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதேசமயம் இந்த நடைமுறையை சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு அமல்படுத்துவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால், டீசல் விலையும் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|