பதிவு செய்த நாள்
28 ஏப்2012
14:36

ஈரோடு: வெயிலின் தாக்கத்தால் சென்ற மாதத்தை விட, பீர் விற்பனை களை கட்டி வருகிறது. ஈரோட்டில், 15 நாட்களில், ஆறு கோடி ரூபாய்க்கு பீர் விற்பனையாகியுள்ளது.
கோடைகாலத்தை முன்னிட்டு, டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடைகளிலும் தட்டுப்பாடின்றி பீர் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நடப்பு கோடைகாலத்தில், 11 சதவீதம் பீர் விற்பனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் மாதம் சராசரியாக ஒவ்வொரு கடையிலும் தினசரி, 2,000 கேஸ் பீர் விற்கப்பட்டது. பீர் விற்பனை மட்டும் ஒன்பது கோடி ரூபாயை எட்டியது. ஏப்ரல் மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் உச்சநிலை அடைந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால், குடிமகன்கள் அதீத தாகத்தை தணிக்க, டாஸ்மாக் கடையை நாடுகின்றனர்.
தற்போது, தினசரி, ஒவ்வொரு கடையிலும், 4,297 கேஸ் பீர் விற்பனையாகிறது. கடந்த, 15 நாட்களில், 73 ஆயிரம் கேஸ்கள் விற்றதன் மூலம், ஆறு கோடி ரூபாய்க்கு மேல் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்ற மாதத்தை விட, ஐந்து சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை வெயில் ஜூலை வரை நீடிப்பதால், மேலும் விற்பனை அதிகரிக்கும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|