பதிவு செய்த நாள்
30 ஏப்2012
00:39

சென்னை:யூனிநார் நிறுவனம், இணையதளம் வாயிலாக தொடர்பு கொண்டு பேசுவதற்கான கட்டணத்தை, நிமிடத் திற்கு,10 பைசா என்ற அளவிலிருந்து, 2 பைசாவாக குறைத்துள்ளது.நிறுவனம், அதன் முக்கிய கோட்பாடான "குறைந்த செலவில் அதிகம் பேசு' என்பதற்கு இணங்க, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு, நிமிடத்திற்கு 2 பைசா மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
இது தவிர, சாதாரண தொலைபேசி மற்றும் மொபைல் போன்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்ட ணம், நிமிடத்திற்கு 30 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதை வாடிக்கையாளர்கள்,17 ரூபாய் செலுத்தி இப்புதிய கட்டணச் சலுகையைப் பெறலாம்.மேலும்,புதிய வாடிக்கையாளர்கள் 32 ரூபாய் செலுத்தி,90 நாட் கள் கால அளவில் (வேலிடிட்டி)இச்சலுகையைப் பெறலாம் என, இந்நிறுவனத்தின் தமிழக வர்த்தகப் பிரிவின் தலைவர் சிவக்குமார் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|