பதிவு செய்த நாள்
05 மே2012
13:05

பீஜிங்: சீனாவில், எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட உள்ளது.சீனர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது அதிகரித்துள்ளதால், கடந்த, 20 ஆண்டுகளில், 2 கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. போலி பாஸ்போர்ட்களை தவிர்ப்பதற்காக சீன அரசு, "எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்டுகளை, இம்மாதம் 15ம் தேதி முதல் வழங்க உள்ளது. புதிய வகை பாஸ்போர்ட் புத்தகங்கள் கடந்த, மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தன. வழக்கமான தோற்றத்துடன் பாஸ்போர்ட் புத்தகம் காணப்பட்டாலும் அதனுள், "எலக்ட்ரானிக் சிப்' இணைக்கப்பட்டிருக்கும்.பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், விலாசம், போட்டோ, கைரேகை பதிவு உள்ளிட்டவை இந்த எலக்ட்ரானிக் சிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பாஸ்போர்ட்டில், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு அவசியம். 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதியின் பேரில் கைரேகை பதிவு செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|