பதிவு செய்த நாள்
14 மே2012
15:06

ஜப்பான் நாட்டை சேர்ந்த சுசூகி இருசக்கர வாகன நிறுவனம், இந்தியாவில் ஸ்விஸ், ஆக்சஸ் ஆகிய ஸ்கூட்டர்களையும், ஜிஎஸ்150ஆர், சிலிங்ஸாட், சிலிங்ஸாட் பிளஸ் ஆகிய மோட்டார் சைக்கிள்களையும் விற்பனை செய்து வருகிறது.இந்தியாவில், மாதம் தோறும் 10 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதில் மோட்டார் சைக்கிள்களின் பங்களிப்பு, 7 லட்சம். ஆண்டுதோறும், 8 சதவீதம் அளவுக்கு, மோட்டார் சைக்கிள்கள் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, என்டரி லெவல் பைக் எனப்படும், 100 சிசி பிரிவில் தான் மோட்டார் சைக்கிள் விற்பனை அமோகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், சுசூகி நிறுவனம், " ஹயாதி' என்ற பெயரில் புதிய 110 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 112 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கிக் ஸ்டார்ட் வசதி கொண்ட ஹயாதியின் விலை ரூ.40,162. செல்ப் ஸ்டார்ட் வசதி கொண்ட பைக்கின் விலை ரூ.42,162( எக்ஸ்ஷோரூம், புனே). ஐந்து வண்ணங்களில் இந்த பைக் கிடைககும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|