ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ... ‌தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு ‌தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
காலக்ஸி எஸ் 3 விலை ரூ.38,000
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
12:47

பல நாட்களாகக் காத்திருந்த பின்னர், இந்தியாவில் சாம்சங் காலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.38,000 எனக் குறிக்கப்பட்டுள்ளது. காலக்ஸி எஸ் 2 ஏற்படுத்திய பரபரப்பினால், பலரும் காலக்ஸி 3 ஸ்மார்ட் போனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மே இறுதி வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெளியான பின்னர், இந்தியாவில் ஜூன் முதல் வாரத்தில் இது கிடைக்கும். குறிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.4,000 குறைவாக இது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைவான் நாட்டின் எச்.டி.சி. நிறுவனத்தின் ஒன் எக்ஸ் (‘One X’) என்ற ஸ்மார்ட் போனுக்குப் போட்டியாக, சாம்சங் கேலக்ஸி எஸ்3 சந்தையில் இறக்கிவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக சாம்சங் போனின் விலை எச்.டி.சி.யின் விற்பனையைப் பாதிக்கும் என்றே தோன்றுகிறது. கேலக்ஸி எஸ்3 யின் அம்சங்களை இங்கு பட்டியலிடலாம்.
1. டச் விஸ் தொழில் நுட்பத்துடன் ஆண்ட்ராய்ட் 4.0 ஐஸ்கிரீம் சாண்ட்விச் இயக்கத்துடன் கிடைக்கிறது.
2. 1.4 கிகா ஹெர்ட்ஸ் குவார் கோர் எக்ஸைனோஸ் 4212 ப்ராசசர்
3. 4.8 அங்குலத்திரையில், 1280 x 720 ரெசல்யூசனில் எச்.டி. சூப்பர் AMOLED டிஸ்பிளே.
4. ஆட்டோ போகஸ் திறனுடன் 8 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், BSI சென்சார், 1080p HD வீடியோ ரெகார்டிங் எனப் பல தரப்பட்ட வசதி.
5. வீடியோ சேட் வசதிக்கென முன் பக்கமாக 1.9 எம்.பி. கேமரா,
6. உள் நினைவகமாக 16/32/64 ஜிபி; 64 ஜிபி வரை அதிகப்படுத்த வசதி.
7. 1 ஜிபி ராம் நினைவகம்.
8. நெட்வொர்க் இணைப்பிற்கென NFC, WiFi, DLNA, GLONASS, microUSB 2.0, HDMI, Bluetooth 4.0 ஆக பல தரப்பட்ட வசதிகள்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)