பதிவு செய்த நாள்
22 மே2012
09:58

வேடச்சந்தூர்: புகையிலையால் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரத்து 271 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், புகையிலையால் உண்டாகும் புற்றுநோய் உள்ளிட்ட இதர நோய்களுக்காக அரசு ஆண்டுக்கு 30 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவிடுகிறது. இதனை, வேடச்சந்தூரில் நடைபெற்ற, புகையிலைக்கான மாற்று விவசாயம் குறித்த கருத்தரங்கில், அடையாறு புற்றுநோய் மைய பேராசிரியர் விதுபாலா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: புகையிலையால் தினமும் 2,500 பேர் இறக்கின்றனர். இதில், நான்காயிரம் நச்சுப் பொருட்கள் உள்ளன. புகையிலையால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 10, 271 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்காக 30 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகிறது. புகையிலை விவசாயத்தில், 60 லட்சம் பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் புகையிலைக்கு மாற்றாக முருங்கை, நிலக்கடலை, பருத்தி, மிளகாய், உருளைக்கிழங்கு, சோளம், சோயாபீன்ஸ் போன்ற பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|