பதிவு செய்த நாள்
22 மே2012
10:05

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151.98 புள்ளிகள் அதிகரித்து 16335.24 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 43.55 புள்ளிகள் அதிகரித்து 4949.60 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்ற சீன பிரதமரின் அறிவிப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இருப்பினும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு, ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடன் பிரச்னை போன்றவை பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கடைசி 30 நிமிட வர்த்தகத்தில், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது. நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|