பதிவு செய்த நாள்
22 மே2012
14:24

அசோக் லேலாண்டு உற்பத்தி செய்யும், வர்த்தக வாகனங்களின் விலையில் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பொது பட்ஜெட்டில், வாகனங்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டது. இதையடுத்து, மே மாதம் முதல் வாரம், அசோக் லேலாண்டு வாகனங்களின் விலையில், 5 சதவீதம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசு சமீபத்தில், வாகன சேஸிஸ் மீதான கலால் வரியில், ஒரு சதவீதம்குறைத்து சலுகை அளித்தது. அதாவது, சேஸிஸ் மீதான கலால் வரி, 15 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அசோக் லோண்டு வாகனங்களின் விலையிலும், ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. அசோக் லேலாண்டு நிறுவனத்தின் ஆவியா ரக வாகனங்கள், செக் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில், இந்த வாகனங்கள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவியா ரக வாகனங்கள், உத்தர்காண்ட் மாநிலம், உத்தம் சிங் நகர் மாவட்டம், பந்த்நகரில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|